தலைப்புச் செய்திகள் (23- 02-2024)

*நடாளுமனறத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் அரசியல் கட்சிப் பிரநிதிநிதிகள் உடன் ஆலோசனை … வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ள சந்தேகங்களை களைய வேண்டும் என்று கட்சி்ப் பிரதிநிதிகள் வலியுறுத்தல்.

*கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி… சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு

*சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் கருத்து.

*சட்ட விரோதாமாக மணல் எடுக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல , விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என்று அமலாக்கத்துறை வாதம்….. அடுத்த விசாரணையை மார்ச் 4- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ‘UmagineTN 2024’ உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு.

*அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு… ‘அபராதம் விதிப்பதால் மட்டுமே தீர்வு ஏற்படாது; உரிமம் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.

*மக்களவை தேர்தலை ஒட்டி பிப்ரவரி 26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடு வீடாக திமுக பரப்புரபாஜகவின் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

*சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற மேயர் பிரியாவின் கார் விபத்துக்குள்ளானது.,,,முன்னே சென்ற கார் திடிரென திரும்பிய நிலையில் பின்னால் வந்த மேயர் கார் மோதியது.பின்னால் வந்த லாரியும் மேயர் கார் பின்னாடி மோதி விபத்து.,,,,விபத்தில் மேயர் பிரியா காயமின்றி தப்பினார்.ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம்.

*தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்படும்… முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்.

*”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடிகள் செய்து மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது பாஜக”… திருமாவளவன் குற்றச்சாட்டு.

*கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் நடிகை திரிஷாவை தொடர்பு படுத்திப் பேசிய அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்… விளக்கம் கேட்காமல் தம்மை நீக்கியது சட்டப்படி தவறு என்று புகார்.

*திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு …. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாததா் இடைக்கால ஜாமீன் தர வேண்டாம் என்று போலீஸ் தரப்பு வாதம் ஏற்பு.

*அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பதியப்பட்ட இரண்டு வழக்குகளும் ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

*பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 9 பேரும் ஓராண்டுக்குப் பிறகு கோவை மகளிா நீதி மன்றத்தில் ஆஜர் … வழக்கின் முக்கிய ஆவணமான வீடியோக்களை போட்டுப் பார்த்து குற்றவாளிகள் அடையாளம் காணும் பணி நடைபெற்றது.

*கும்பகோணம் மாசிமக விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை….அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறவிப்பு.

*தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார்…. படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதி விபத்து,ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி.

*ராகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்வதன் நோக்கம் என்ன?,,, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

*கடந்த 10 நாட்களுக்கு முன்பு  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார். 10 நாட்களில் இரண்டாவது விபத்தில் லாஸ்யா நந்திதா உயிரிழந்ததில் அனவைரும் அதிர்ச்சி.

*கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு இறந்தததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது… கடந்த 19ஆ-ம் தேதி தான் சயன்னாவின் முதலாமாண்டு நினைவு தினம் கடந்த 19- ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட 4- வது நாளில் மகள் மரணமடைந்தில் அதிர்ச்சி.

*நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம்…. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை.

*மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலில் திடீர் திருப்பம்… நமது தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு உள்ள இந்திய நீதிப்பயணம் மத்தியப் பிரேதேசத்திற்கு வரும் போது உற்சாகமான வரவேற்பை தரவேண்டும் என்று அறிக்கை.

*உத்திரபிதேசத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது … ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு.

*கும்பகோணம் மாசிமக விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை….அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறவிப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *