தலைப்புச் செய்திகள் (22-03-2024)

*பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ” தமிழ்நாடு” ஆளுநர் ஆர்.என்.ரவி… தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் “வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல்.

*மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி … சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.

*அமைச்சராகப் பொறுப்பேற்ற பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு… அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்ட உயர் கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு கிடைத்தது… பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நிடிப்பார் என்று அறிவிப்பு.

*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்று வருடம் சிறைத் தண்டனை விதித்ததால் அமைச்சர் பதவியை இழந்திருந்தார் பொன்முடி… தண்டணையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு.

*2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் … மன்மோகன் ஆட்சிக் காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் முறை கேடு நடைபெற்றதாக சி.பி.ஐ.யால் தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசா, கனி மொழி இருவரையும் விடுவி்த்திருந்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

*மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவது, சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றுவது என்று அதிமுக தேர்தல்அறிக்கையில் வாக்குறுதி .. நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது அதிமுக.

*ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்…. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசிடம குரல் கொடுக்கப்படும் என்றும் அதிமுக அறிவிப்பு.

*திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின் … திமுகவிற்கு தூக்கம் வரவில்லை என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி, தோல்வி பயத்தில் அவருக்குதான் தூக்கம் வரவில்லை என்று விமர்சனம்.

*பாமக சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் செளமியா அன்புமணி போட்டியிடுவார் என்று ராமதாஸ் அறிவிப்பு … ✦ திண்டுக்கல் – ம.திலகபாமா, ✦ அரக்கோணம் – கே.பாலு ✦ ஆரணி – கணேஷ்குமார், ✦ மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின், ✦ கள்ளக்குறிச்சி – தேவதாஸ் உடையார், ✦ கடலூர்- தங்கர் பச்சான் ,✦ சேலம் – அண்ணாதுரை , ✦ விழுப்புரம் – முரளி சங்கர் என்றும் வேட்பாளர்களை அறிவித்தது பாமக.

*விருது நகர் தொகுதியில் ராதிகா சரத் குமார் போட்டியிடுவார் என்று பாஜகவின் நான்காவது வேட்பாளர் பட்டியலில் அறிவி்ப்பு … பாஜக சார்பில் போட்டியிடும் மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு …திருவள்ளூர் – பாலகணபதி .வட சென்னை – பால் கனகராஜ் ..திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்..நாமக்கல் – கே.பி.ராமலிங்கம். திருப்பூர் – முருகானந்தம். பொள்ளாச்சி – வசந்தராஜன். கரூர் – செந்தில்நாதன். சிதம்பரம் – கார்த்தியாயினி..நாகை – எஸ்.ஜி.எம்.ரமேஷ் தஞ்சை – எம்.முருகானந்தம் சிவகங்கை – தேவநாதன் யாதவ்,மதுரை – ராம சீனிவாசன். விருதுநகர் – ராதிகா சரத்குமார,தென்காசி – ஜான் பாண்டியன், புதுச்சேரி – நமச்சிவாயம் ஆகியோர் பாஜக வேட்பாளாகள்.

*விளங்கோடு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் எஸ்.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிப்பு. . காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறி வந்த விஜயதாரணிக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை பாஜக.

*தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… திருவள்ளுர் (தனி) – நல்லதம்பி, மத்திய சென்னை – பார்த்தசாரதி, கடலூர் – சிவக்கொழுந்து, தஞ்சாவூர் – சிவனேசன், விருதுநகர் – விஜய பிரபாகரன் ஆகியோர் தேமுதிக வேட்பாளர்கள்.

*விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் விஜயபிரபாகரன் மறைந்த விஜயகாந்த் புதல்வர் … விருது நகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளதால் பிரச்சராம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்ப்பாாப்பு.

*தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு தொகுதியில் பி.விஜயகுமார் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் கே.என்.வேணுகோபால் போட்டி … தூத்துக்குடி தொகுதியின் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் பேட்டி.

*நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம்… கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த சூரிய மூர்த்திக்குப் பதிலாக மாதேஷ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிப்பு.

*நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்படுவதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு அறிவிப்பு .. கரும்பு விவசாயி கேட்டு சீமான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்ள மைக் சின்னம் கிடைத்தது.

*தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். என்ற தேர்தல் ஆணையம் உத்தரவு. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4- ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு.

*விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் நீதிமன்ற உத்தரவுப்படி 9 மாதங்களுக்குப் பிறகு அகற்றம்… மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜை நடைபெறும் என்றாலும் பொதுமக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பால் பரபரப்பு.

*மது பான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவந்த் கெஜ்ரிவாலை பத்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி … கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்.

*‘டெல்லி அரசின் மதுபான ஊழலில் பெறப்பட்ட ரூ 1″00 “கோடியை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மற்றும் “கோவா சட்டமன்றத் ஞதேர்தலுக்கு செலவிட்டதாகூஞஞ ஙஞஞஞ அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தகவல் … மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த்கெஜ்ரிவால் தான் முக்கியமான குற்றவாளி என்றும் வாதம்.

*ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை…. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார் என்று கெஜ்ரிவால் கைது பற்றி ராகுல் காந்தி விமர்சனம்.

*அரவிந்த் கெஜ்ரிவால் கைது; நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு … போராட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் பங்கேற்குமாறு வேண்டுகோள்.

*ஒரிசா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி .. 21 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சாமல் அறிவிப்பு.

*பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டான் நாட்டுக்கு பயணம்… மன்னர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து, இந்தியா- பூட்டான் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

*விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் பணி மறுபயன்பாட்டு ஏவுகலன் தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியது இஸ்ரோ… கர்நாடகாவின் சலாகரே விமானப்படை ஓடுபாதையில் செயற்கைக்கோளை ஏவி விட்டு மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் சோதனை வெற்றி.

*பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலகலமாக ஆரம்பம் .. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *