தலைப்புச் செய்திகள் (21-03-2024)

*டெல்லிமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத் துறை … டெல்லி அரசின் மது பான கொள்கை வழக்கில் ஓராண்டுக்கு முன்பு துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியாவை கைது செய்து சிறையில்அடைத்த அமலாக்க்துறை இன்று கெஜ்ரிவாலையும் கைது செய்தது.

*கைது நடவடிக்கைக்கு தடைவிதிக்குமாறு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தை அடுத்து அவருடைய வீட்டில் மாலையில் சேதானை நடத்தியது அமலாக்கத் துறை… சோதனையை தொடர்ந்து கெஜ்ரிவால் கைது .

*ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் இரண்டு மாதங்கள் முன்பு கைது செய்த அமலாக்கத்துறை இன்று டெல்லி முதலமைச்சரையும் சிறையில் அடைத்தது… நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு ஆம் ஆத்மி கண்டனம்.

*உச்சநீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடிக்கு பணிந்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் … தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.

*பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது குறித்து நாளைக்குள் ஆளுநர் ரவி பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு…இல்லையென்றால்……நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் எச்சரிக்கை.

*சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா? ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.

*உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள கண்டனத்தை அடுத்து ஆளுநர் ரவி பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல் … அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி பதவியில் தொடரக் கூடாது மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம்

*அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை…ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

*சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள G Square தலைமை அலுவலகம் உட்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை… அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை என தகவல்.

*குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்… விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தகவல். அடுத்த விசாரணை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பு..

*எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 32 ராமேஸ்வரம் மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்து 5 விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை… கைது செய்யப்பட்ட 32 மீனவர்களையும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்.

*அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார், வேலூர் – எஸ்.பசுபதி, தருமபுரி – அசோகன் திருவண்ணாமலை – கலியபெருமாள், கள்ளக்குறிச்சி – குமரகுரு, திருப்பூர் – பி.அருணாச்சலம், நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன் கோவை – சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி, திருச்சி – கருப்பையா, பெரம்பலூர் – சந்திரமோகன் மயிலாடுதுறை – பி.பாபு,சிவகங்கை – சேவியர்தாஸ், தூத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி, திருநெல்வேலி – சிம்லா முத்துச்செல்வன், கன்னியாகுமரி – பசுலியான் நசரேத், புதுச்சேரி – தமிழ்வேந்தன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் – யு.ராணி போட்டியிடுவார் என்றும் அறிவிப்பு.

.*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு … தென் சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்,.மத்திய சென்னை – வினோஜ் P. செல்வம். வேலூர் – AC சண்முகம். கிருஷ்ணகிரி – நரசிம்மன். நீலகிரி – எல்.முருகன். கோயம்புத்தூர் – அண்ணாமலை. பெரம்பலூர் – பாரிவேந்தர். திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன். கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன் என்பது முடிவானது.

*தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி. மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு, 4 தொகுதியில் பாஜக சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி என்று அண்ணாமலை பேட்டி..

*ராமநராதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக ஓ. பன்னீர் செல்லவம் அறிவிப்பு … தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் மூன்று இடங்களை தருவதாக பாஜக தெரிவித்ததை ஏற்காமல் ஒரு தொகுதியில் மட்டும் தன்னையே வேட்பாளராக அறிவித்துக் கொண்டர் பன்னீர்.

*இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி… தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.

*தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி … மார்ச் 24-ம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பரப்புரையை தேமுதிக தொடங்க உள்ளதாகவும் தகவல்.

*தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்… தேர்தல் பிரச்சார வியூகங்கள் குறித்து தேமுதிக நிர்வாகிகள் உடன் ஆலோசனை.

*மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு.டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை.

*தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு …வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்குமாறும் அறிவுறுத்தல்.

*மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கிறோம், அரசியல் காரணங்களுக்காக திமுக செயல்படுகிறது …கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் புகார்.

*தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2- ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள்…ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

*ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்…ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் என்றும் கல்வித் துறை அறிவிப்பு.

*காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கினால் எப்படி தேர்தலில் செலவிடுவது? காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது….பாஜகவின் நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி புகார்.

*புதிய சட்டத்தில்  தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி .. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால தடை விதித்தால் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து

*வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை

*மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு…. தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம், முடிவெடுக்கும் வரை இந்த தடை இருக்கும் எனவும் உத்தரவில் தெரிவிப்பு.

*கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கந்தர்வா மீது பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு …. தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூரில் குண்டு வைக்கிறார்கள் என்று பேசியதால் ஷோபா மீது வழக்குப் பதியுமாறு உத்தரவிட்டிருந்தது தேர்தல் ஆணையம்.

*மற்ற முறை மருந்துகளை இழிவு செய்து விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் உச்சநீ்திமன்றத்தில் மன்னிப்புக் கோரியது … ராம் தேவ் மற்றும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாலகிருஷ்ணா இருவரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜராக உத்தரவு.

*பாகிஸ்தானினில் குவாடர் துறைமுகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பலுசிஸ்தான் விடுதலை இயக்கத் தீவிரவாதிகள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி … பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கோரும் விடுதலை இயக்கம், சீனா முதலீட்டில் குவாடர் துறைமுகம் கட்டப்படுவதைக் கண்டித்து தாக்குதல் நடத்தியதாக தகவல்.

*உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பரவசம் …. நான்கு வீதிகளில் ஆடி அசைந்து வந்த ஆழித்தேரின் அழகைக் காண பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்.

*மகேந்திர சிங் தோனியின் 13 ஆண்டுகால சிஎஸ்கே கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது… சென்னை அணியின் புதிய கேப்டனாக இருந்த க தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கேப்டனாக நியமனம்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *