தலைப்புச் செய்திகள் (19-03-2024)

*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு … திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசும் அண்ணாமலையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து.

*கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உள்ள பாமக ,இந்த நாடாளுமன்றத் தேர்தலையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்கிறது…..அண்ணாமலை விளக்கம்.

*தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது. என்று அன்புமணி விளக்கம்…தங்கள் கூட்டணி இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை.

*சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு…தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை வரவேற்பாதாக மோடி பேச்சு .

*நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் … சென்னை அண்ணா அறிவாலயத்தில நாளை விழா.

*தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு…. ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிப்பு.

*கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடி பிரச்சார பேரணியில் அரசு பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் … சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது, விசாரணைக்குப்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தகவல்.

*பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

*மதக் கலவரத்தை தூண்டியதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியாவை கைது செய்தது பெங்களூரு போலீஸ்….தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களை தெருவில் நிறுத்தி மோடிக்கு வரவேற்புக் கொடுப்பது போன்று படம் எடுத்து வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது … தேர்தல் ஆணயைத்திடம் முறையிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் முத்தரசன் அறிவிப்பு.

*தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த மாநில அரசிடம் 750 கோடி ரூபாய் கோரிய தேர்தல் ஆணையம்.. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட கூடுதலாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாக தகவல்.

*திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு …சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன்.விழுப்புரம் தொகுதியில ரவிக்குமார் இருவரும் மீண்டும் போட்டி.

*தேர்தல் நடத்தை விதிகளை மீறி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் …தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு.

*திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றி விட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன் நடிகை விஜயலட்சுமி கொடுத்தப் புகார். … மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வது தொடர்பாக விஜயலட்சுமி ஏப்ரல் 2 -ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

*பீகாரில் மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலன லோக் ஜனசக்தி கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு … ராம் விலாஸ் பஸ்வானின் உறவினரும் மற்றொரு பிரிவு லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான பசுபதி குமார் பராஸ் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

*தெலுங்கான மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவி்ன் மகள் கவிதா கைது செய்யப்பட்டு உள்ளது பற்றி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை விளக்கம் … டெல்லி மாநிலத்துக்கு மதுபானம் விநியோகிக்க ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுக்கு ரூ 100 கோடி கொடுத்ததில் கவிதா உடந்தை என்று குற்றச்சாட்டு.

*பதஞ்சலி நிறுவனம் தமது தயாரிப்பு மருந்துப் பொருட்களை உயர்வாக பேசுவதற்காக அலோபதி மருந்துகள் பற்றி தவறாக விளம்பரம் செய்த வழக்கு ,,, பதஞ்சலி நிறுவனர் ராம் தேவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதின்றம் அதிரடி உத்தரவு.

*வடகொரியா இன்று காலை குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை … அண்டை நாடான தென் கொரியா தனது ஆதரவு நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டதற்கு பதிலடி.

*மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி …. அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளதாக அறிவிப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *