தலைப்புச் செய்திகள் (18-03-2024)

*திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகள் அறிவிப்பு … ✦ திருவள்ளூர் (தனி)✦ கடலூர் ✦ மயிலாடுதுறை✦ சிவகங்கை ✦ திருநெல்வேலி✦ கிருஷ்ணகிரி ✦ கரூர் ✦ விருதுநகர்✦ கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு.

*கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கியது திமுக … மு.க.ஸ்டாலின்- வைகோ இடையே உடன்பாடு.

* திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவிப்பு … இது வரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத துரை வைகோ முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்

* நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுப் போக 21 தொகுதிளில் களம் காண்கிறது திமுக …… ✦ சென்னை வடக்கு ✦ சென்னை தெற்கு ✦ மத்திய சென்னை ✦ காஞ்சிபுரம் ( தனி) ✦ அரக்கோணம்✦ வேலூர் ✦ தருமபுரி ✦ திருவண்ணாமலை ✦ சேலம்✦ கள்ளக்குறிச்சி ✦ நீலகிரி (தனி) ✦ பொள்ளாச்சி ✦ கோவை ✦ தஞ்சாவூர் ✦ தூத்துக்குடி ✦ தென்காசி (தனி) ✦ ஸ்ரீபெரும்புதூர் ✦ பெரம்பலூர் ✦ தேனி✦ ஈரோடு ✦ ஆரணி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது..

*திமுக கூட்டணியில் திருப்பூர், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி … திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன், நாகை தொகுதியில் வை.செல்வராஜ் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிப்பு.

*பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரும் மனுவை, அவசர வழக்காக நாளையே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு….. அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுவதாகவும், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிப்பதாகவும் மனுவில் குற்றச்சாட்டு.

*கோயம்புத்தூரில் சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை திறந்த வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி பாஜகவுக்கு பிரச்சாரம்…. மோடியின் வாகனத்தில் அண்ணா மலை ,முருகன் இருவருக்கும் இடம்.

*கோவையில் 1998 குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி .. ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு உயிரிழந்தோர் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கி, காலணிகளை கழற்றிவிட்டு புகைப்படங்களுக்கு மலர் தூவி மோடி அஞ்சலி

*அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதித்த தடை நீடிக்கும் ..சென்னை உயர்நீதிமன்றம். உத்தரவு.

*அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும்….அல்லது அதிமுக (OPS) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

*தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் … நாடளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டம்.

*கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துதுக்குடியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் தமிழசை … இந்த தேர்தலில் புதுச்சேரி , தூத்துக்குடி அல்லது நாகர்கோயில் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று தகவல்.

*மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து பாமக சந்திக்கிறது என்று கட்சி பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தைலாபுரத்தில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு ….வேட்பாளர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை (அ) நாளை மறுநாள் பாமக நிறுவனர் அறிவிப்பார் என்றும் பேட்டி.

*போதைப் பொருள் கடத்தல் குறித்து அதிமுக எழுப்பிய கேள்விகளுக்கு திமுக அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் ….அதிமுகவின் ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்’ என்ற போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பொதுமக்கள் திமுகவிற்கு மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் நம்பிக்கை.

*போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்-கை டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணை …ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து அரசியல் தொடர்புகள் குறித்து கேள்வி.

*பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநருக்கு திமுக கண்டனம்… ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று திமுக எம்.பி., வில்சன் எக்ஸ் தளத்தில் பதிவு

*விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் காலையில் லாரி கவிழ்ந்து விபத்து…. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது,

*தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே தாங்கள் விரும்புவதாக உச்சநீதின்றம் கருத்து .. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்கள் உட்பட மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என்று ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

*நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் ₹95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம அறிவிப்பு… சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ₹40 லட்சம் வரை செலவு செய்வதற்கு அனுமதி.

*பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இடையேயான தொகுதிப் பங்கீடு அறிவிப்பு…. பாஜகவுக்கு 16, நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளத்திற்கு 16, சிராக் பஸ்வான் தலைமையிலான கட்சிக்கு 5 மற்ற கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள்.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குடி நீர் வாரியத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பியிருந்த சம்மனை ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை … ஏற்கனேவே மதுபான கொள்கை வழக்கிலும் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பது குறிபிடத்தக்கது,

*ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும் டெல்லி துணை முதலமைச்சராக இருந்தவருமான மணீஷ் சிசோடியா கைது செய்யபட்டு பல மாதங்களாகியும் ஜாமீனில் விடுவிப்பதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு …. டெல்லி மதுபான வழக்கில் உயர் பொறுப்பில் உள்ள மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கெஜ்ரிவால் பெயரைக் குறிப்பிடாமல் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வெளியிட்ட தகவலால் பரபரப்பு.

*ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து…. தடம் புரண்ட எஞ்சின் உட்பட 4 பெட்டிகள் துரிதமாக மீட்பு.

*ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடும் விளாடிமிர் புதின் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க ஆயத்தம் …எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஓரம் கட்டி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டார் புதின்.

*மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை அருந்ததி நாயருக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ,,,, திருவனந்தபுரம்- கோவளம் பைபாஸ் சாலையில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதி்ல் அருந்ததியும் அவருடைய சகோதரரும் படுகாயம்.

*சென்னையில் மார்ச் 22- ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போாட்டியின் முதல் ஆட்டத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள், ஆன்லைனில் தெடாங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன … டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம்.

*ஐபில் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் ஸ் அணியும் மோதுகின்றன… ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை .. குறைந்தப பட்சம் ரு 2500 அதிக பட்சம் ரூ 7,500 என்று டிக்கெட் விலை நிர்ணயம்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *