ஜூன்.1 சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்கவும், தேவைப்பட்டால் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் இங்கு தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிநவீன வந்தே பாரத் ரயில்Continue Reading

மே.29 இந்தியாவில் எடை குறைந்த துருப்பிடிக்காத நவீன வடிவ சமையல் எரிவாயு சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர்களை விநியோகித்துவருகிறது. அதன்படி, வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், புதிதாக எடைContinue Reading

மே.26 இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஒட்டி ரூ. 75 நாணயம் புழக்கத்திற்கு விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் (மே.28) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி, ரூ.75 நாணயம் புழக்கத்திற்கு வரவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும்Continue Reading

மே.25 இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிஎல்ஐ எனப்படும் ‘உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.75 லட்சம் பேர் வேலை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளContinue Reading

மே.24 இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டில் 43 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிபெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஓராண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 5 கோடியே 39 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டுContinue Reading

மே.22 தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தொழில்துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்குContinue Reading

மே.11 தங்கத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தால், சவரனுக்கு ரூ.5,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதனால், தங்க நகை விற்பனை குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 47,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை உயர்வைத் தடுக்க என்னContinue Reading

மே.5 ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட கேரள முதலமைச்சர், அபுதாபி செல்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பான மனுவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சர்Continue Reading

மே.2 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ளContinue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தில் உள்ள வணிகவளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (ஏடிஎம்) மூலம் மது விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களைContinue Reading