மே.22 கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு கோடை சீசனில், பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன்Continue Reading

மே.19 கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதன்படி, நேற்று திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாContinue Reading

மே.18 ஒடிசா மாநிலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் நரேந்திமோ மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொள்கிறார். புதுடெல்லியில் இருந்து இன்று பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்,Continue Reading

மே.12 ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவையும் நாள்தோறும்Continue Reading

மே.9 திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின தங்க கோபுரத்தை விதிமுறைகளை மீறி பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது கேள்விContinue Reading

மே.8 கேரள மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணிகளுன் சுற்றுலா படகு சென்றது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த படகானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில்Continue Reading

மே.5 தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த ஒரு வாரமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் தடை விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர்ந்துContinue Reading

மே.2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள பஞ்சலிங்க அருவியில் மே தினம் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையைக் கொண்டாட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில்Continue Reading

மே.1 கேரளா மாநிலம் திருச்சூரில் உலக பிரசித்திபெற்ற பூரம் திருவிழா நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் வருடம்தோறும் நடத்தப்படும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த திருவிழாவில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கி, திருவம்பாடி பகவதி அம்மன்Continue Reading

ஏப்ரல்.26 உதகையில் கோடை சீசனை முன்னிட்டு 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குன்னூர் – பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.Continue Reading