தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு கெளரவ துணை தலைவராக லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நியமனம்!!

June o1, 2023

தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”தமிழ்நாடு மாநில மாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணனனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் சிறப்பான பங்களிப்பும், விளையாட்டை ஊக்குவிப்பதில் உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக உங்களின் அனுபவம், தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் உங்களின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைகளுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும். எங்களது விளையாட்டுப் பிரிவின் ஒரு அங்கமாக நீங்கள் கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்.”

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *