விபத்தான ரயிலில் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்… சென்னை வந்த பயணி பரபரப்பு பேட்டி….

சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் பனி முடித்து கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளர். விபத்து குறித்து அவர் கூறுகையில்…

தான் இருந்த S2 பெட்டியில் 250 மேற்படோர் பயணித்தோம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும் முடிந்து ஒய்ந்தது.அனைவரும் அலரி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்ததோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஜன்னல் கம்பியை பிடித்ததால் காயம் ஏதுமின்றி நான் உயிர் தப்பினேன்.பின்னர் வெளியே வந்தோம்.

அனைத்தும் இருட்டாக இருந்தது எந்தனை ரயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை.பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர்.பின்னர் அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்கள் என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணந்து அருகே உள்ள சாலையில் சென்ற பேருந்து மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்து, அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தேன் என்று கூறினார்.

ரயில் விபத்தில் சிக்கி வீடு திரும்பிய முருகனுக்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *