மே. 19
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.