பொறியியல் மாணவர் சேர்க்கை – இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

மே.5

தமிழகத்தில் அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில்பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான இலவச சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *