பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் – தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி, கடந்த 03ம் தேதி நிறைவு பெற்றது. பொதுத்தேர்வின் கடைசி நாளில், பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் மே மாதம் 5-ந் தேதி வெளியிடப்படவுள்ளன.

இந்த நிலையில், கணித தேர்வில் வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை அளிக்க சிரமப்பட்டனர். இதனையடுத்து அந்த கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *