பள்ளி மாணவி கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 27 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய போக்சோ நீதிமன்றம்

ஏப்ரல்28

தூத்துக்குடி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கடத்தி சென்ற கோவையை சேர்ந்த மெக்கானிக்கிற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட மகளிர் மற்றும் கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோயம்புத்தூர் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்த மெக்கானிக்காக வேலை பார்க்கும் மாதவன் என்ற வாலிபர் பழகியுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பழக்கத்தை பயன்படுத்தி, கடந்த 12-11-2020 அன்று மாதவன், பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு மணியாச்சி காவல்துறையினர் மாதவனை கைது செய்து  சிறுமியை மீட்டனர்.

இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் , மாதவன் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிளா மற்றும் கூடுதல் போக்சோ அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மாதவ ராமானுஜம், பத்தாம் வகுப்பு மாணவியை விருப்பம் இல்லாமல் கடத்தியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 கீழ், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆக மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும்,  இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *