தலைப்புச் செய்திகள் (18-01-2024)

*ஈரான் நாடு நேற்று முன் தினம் தங்கள் நாட்டின் எல்லையோரம் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது வான் வழித் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி… ஈரானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் இறப்பு.

*தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக தீவிரவாதகளின் மறைவிடங்களை குறி வைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் விளக்கம் … நீ்ண்ட காலமாக நட்பாக இருந்த ஈரானும் பாகிஸ்தானும் மாறி மாறித் தாக்கிக் கொள்வதால் மத்திய ஆசியாவில் பதற்றம்

*கோலா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு … சென்னையில் முக்கியமான சாலைகளில் நாளை மாலை போக்குவரத்தில் மாற்றம்.

*ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதி இல்லாதவர்களாக தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது … திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் போவோர் வரை அனைவர் மீது காவி சாயம் பூசும் மூர்க்கத் தனமான அரசியலை முறியடிக்கும் ஆற்றல் திமுகவுக்கு உண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிக்கை.

*பாரதீய ஜனதாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அநீதி செய்து வருகின்றன … பாரத நியாய பயணத்தின் ஐந்தாவது நாளில் அசாம் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அந்த மாநில அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என்றும் விமர்சனம்

*காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்காக பழைய சீவரத்தில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வட கலை – தென் கலை பிரிவினர் இடையே கைகலப்பு…. பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இரு தரப்பும் மோதிக் கொண்ட காட்சி வலைதளங்களில் வைரலானது.

*சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தம். .. விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 148 பயணிகள் உட்பட 160 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

*சென்னையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜனவரி 31-ம் தேதிக்கு மாற்றம்… ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

*போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் சென்னையில் நாளை அரசு பேச்சுவார்த்தை … பொங்கலுக்கு முன்பு நடைபெற்ற வேலை நிறுத்தத்தை அடுத்து நாளை நடைபெற உளள் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தொழிலார்கள் எதிர்ப்பார்ப்பு.

*சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்படும் வெளியூர் பேருந்துகள் அனைத்தையும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க ஒரு வாரத்தில் நடவடிக்கை … போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

*சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூகத்து 18 வயது பெண் மீது சிகரெட்டால் சூடு வைத்து தாக்குதல் … எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தல்.

*பிறப்பு சான்றாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவு … ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு.

*நாடாளுமன்ற தேர்தல் – தமிழக தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ் கட்சி…கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.

*மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு…. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள்.

*டெல்லி அரசின் மதுபான ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை நான்காவது முறை அனுப்பிய சம்மனை ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை கெஜ்ரிவால் … விசாரணையை புறக்கணித்து விட்டு கோவாவுக்கு டெல்லி முதல்வர் பயணம்.

*அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை….அனைத்து அலுவலகங்களும் பிற்பகல் 2:30 மணிவரை செயல்படாது என மத்திய அரசு அறிவிப்பு.

*ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது அமெரிக்கா…. செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்துவதை அடுத்து நடிவடிக்கை.

*சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நடைபெற உளள் கோலோ விளையாட்டுப் போட்டியை பொதுமக்கள் காண்பதற்கு அனுமதி சீட்டு … தமிழ்நாடு விளையாட்டு ஆணயைத்தின் இணைய தளத்தில் போட்டி விவரங்களை பொது மக்கள் பதிவு செய்து அனுமதி பெறலாம் என்று அறிவிப்பு.

*சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கரிநாள் அன்று வங்கா நரியை பிடித்து வரும் நிகழச்சிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி …. வங்கா நரியை யாரேனும் பிடிக்கக் கூடும் என்பதால் வனத்துறை இரண்டாவது நாளாக கண்காணிப்பு.

*நீலகிரி மாவட்டத்தில் தலைகுந்தா உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸை அடைந்தது … கடுமையான குளிர் மற்றும் பனி காரணமாக விவசாயம் பாதிப்பு, பொது மக்கள் கவலை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *