தலைப்புச் செய்திகள் (19-01-2024)

*சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் 6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி… 2024- ஆம் ஆண்டு விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளதாக மோடி உரை.

*விளையாட்டில் தனி இடம் பெற்றுள்ள தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி …பல்வேறு மாநில விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதால் புதிய நண்பர்கை இணங்கான உதவும் என்றும் மோடி பேச்சு.

*ஒரு டிரில்லியன் பொருளாதரம் எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ அது போன்று இந்தியாவின் விளையாட்டுத் துறை தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவதும் திராவிட மாடல் அரசின் நோக்கம் … கேலோ விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

*18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கேலோ விளையாட்டுப் போட்டி ஜனவரி 31 வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடை பெற உள்ளது … 36 மாநிலங்களைச் சேர்ந்த 3500 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க ஆயத்தம்.

*சென்னயை தலைமையிடமாக கொண்ட பொதிகை தொலைக் காட்சியின் பெயர் டிடி தமிழ் என்று மாற்றம் … கேலோ போட்டி தொடக்கவிழாவில் புதிய ஒலிபரப்புக் கோபுரங்களையும் தொடங்கிவைத்தார் பிரதமர்.

*தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் இன்று இரவு சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கல்… நாளை காலை விமானம் மூலம் திருவரங்கத்துக்கும் அங்கிருந்து மதியம் ராமேஷ்வரத்துக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

*”அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது” … முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

* பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி… ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

*சென்னையில் அரசுக்கும் போக்குவரத்து தொழிற்சங்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை மீண்டும் பிப்ரவரி 7- ஆம் தேதி நடத்த முடிவு … நீதிமன்ற வழிகாட்டுதல் படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அதிகாரிகள் உத்தரவாதம்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 23- ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் … தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு.

*பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு … வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமை செய்த புகாரின் பேரில் நீலாங்கரை மகளிர் போலீசார் நடவடிக்கை.

*மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம் … மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருவதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தமக்கு தெரியாது என்றும் அறிக்கை.

*திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைப்பு…. அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு குழுவில் இடம்.

*நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தாயரிக்க கனிமொழி தலைமையில் குழு … அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உட்பட மேலும் பலரும் குழுவில் சேர்ப்பு.

*நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம்… 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

*அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு …தனக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு மீது நடவடிக்கை.

*சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் … ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி கருத்து.

*பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை 25 விழுக்காடு குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், 5 நாட்களிலே நிறுத்திய தமிழ்நாடு அரசுக்கு தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை…. அறிவிக்கப்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்குமாறு வலியுறுத்தல்.

*முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டி.ஜி.பி. யும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு…. நட்ராஜ் வழக்கு,வேறொரு நீதிபதி முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.

*நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்….16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை, மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாதுவிதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் விளக்கம்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 23- ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் … தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு.

*பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

*சென்னையில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட உள்ள உயர்மட்ட சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் … ரூ 621 கோடி செலவில் 3.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் பாலத்தால் போக்குவரத்து குறைவதற்கு வாய்ப்பு.

*பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார்… தமது குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்ததாக காயத்ரி விளக்கம்.

*அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை … முதலமைச்சர் ரங்கசாமி ரங்கசாமி அறிவிப்பு.

*அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்டு உள்ள 51 அங்குல உயரம் கொண்ட கறுப்பு வண்ண ராமர் சிலையின் படம் வெளியானது …. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை வடிவ சிலையின் கையில் தங்கத்தால் ஆன அம்பும் வில்லும் இடம் பெற்று உள்ளது.

*அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் தம்மால் கட்டப்பட்டது போல பிரதமர் மோடி கட்டிக்கொள்வது தவறு என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி விமர்சனம் … மோடி அவருடைய வாரனாசி தொகுதியில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்.

*குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின் போது பல்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 பேரும் சரண் அடைவதற்கான காலக்கெடுவை நீடிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு… ஞாயிற்றுக் கிழமைக்குள் சரண் அடைய உத்தரவு.

*தலைநகர் டெல்லியில் உத்தம் நகர் என்ற இடத்தில் சுவரில் காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவாக எழுத்தப்பட்ட வாசகங்களால் பரபரப்பு … சுவரில் எழுதியவரை கேமிரா கட்சிகளை வைத்து கண்டுபிடிக்க நடவடிக்கை.

*டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று முதல் ஜனவரி 26- ஆம் தேதி வரை காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை விமானங்கள் பறப்பதற்கு தடை … குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு தடை விதிக்கப்படுவதாக விளக்கம்.

*நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்….16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை, மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாதுவிதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் விளக்கம்.

*பாலஸ்தீனியர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா முன் வைத்த கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு மறுப்பு … பால்ஸ்தீனம் உருவானால் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருத்து.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *