தலைப்புச் செய்திகள் (15-04-2024)

*நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மறுதினம் மாலையுடன் முடிவடையுள்ள நிலையில் பரப்புரையை ஆறு மணி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு … வெயில் கொளுத்துவதால் ஒரு மணி நீடித்து இருப்பதாக விளக்கம்.

*இந்தியாவில் வேலை இல்லாதவர்களில் 83 பேர் இளைஞர்கள் என்று மு.க.ஸ்டாலின் மாதவரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் புகார் … கடந்த 2019- ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பாஜக நகல் எடுத்து வெளியிட்டு உள்ளதாக விமர்சனம்.

*திமுகவும் காங்கிரசும் கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுத்து மன்னிக்க முடியாத குற்றம் … நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி புகார்.

*புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கே புதுச்சேரியில் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உறுதி … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி,பிரதமர் மோடியிடம் சரண் அடைந்துவிட்டதாகவும் விமர்சனம்.

*நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை… வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த போது சோதனைக்கு ஆளானார் ராகுல் காந்தி.

*சென்னை அடுத்த ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை… காரில் வந்த 4 பேர் கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டி போட்டு தப்பியோட்டம், சம்பவம் நடந்த இடத்தில் முத்தாப் புதுபேட்டை போலீசார் விசாரணை.

*நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன்… நெல்லை விரைவு ரயிலில் கடந்த 6- ஆம் தேதி ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு. பிடிபட்ட 3 பேரிடம் விசாரித்ததில் நயினாருக்காக பணத்தை கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து சம்மன் அனுப்பி உள்ளதாக காவல் துறை விளக்கம்

*தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க நாளை கடைசி நாள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி.. தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது என்றும் விளக்கம்.

*திமுகவின் தேர்தல் விளம்பரங்களை வெளியிட அனுமதி மறுக்கப்படுவதாக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு விசாரணை …. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம். மீண்டும் 17- ஆம் தேதி விசாரணை நடத்த முடிவு.

*கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் ஆதரவாளர்கள் மீது சூலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு … இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை மீறி சூலூரில் பரப்புரை செய்ததாக புகார்.

*தமிழக கடலோர பகுதிகளில் ஜூன் 14ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது… பல ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் நிறுத்தம்.

*கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி ஏப்ரல் 23-ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஏப்ரல் 23ஆம் தேதிக்குப் பதிலாக மே 11-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு.

*பெரிய கோவில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ஆம் தேதி விடுமுறை.. ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு.

*காவல் துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்ட்ட காவல் துறை அதிகாரி ராஜேண் தாஸ் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணை … காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைப்பு.

*திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் கோவிந்தம்மாள் என்ற 60 வயது பெண்மணி தீக்குளித்து தற்கொலை … சொத்துத் தகராறால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்.

*சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு …எட்டமானூர் ரயில் நிலையத்தில் கார்த்திக்கை இறக்கி மருத்துவமனையில் சேர்ப்பு.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் கைது செய்யப்பட்டதை ரத்துசெய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு … விசாரணை தள்ளிப் போனதால் கெஜ்ரிவால் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பு இல்லை.

*மும்பையில் நடிகர் சல்மான்கான் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கான திட்டம் அமெரிக்காவில் வசிக்கும் நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் என்பவரால் தீட்டப்பட்டு இந்தியாவில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகம் …அன்மோல் பி்ஷ்னாயின் சகோதரர் பல்வேறு கொலை வழக்குகளின் பேரில் திகார் சிறையில் உள்ளார்.

*நீதித் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்க சிலர் முயற்சித்து வருவதாக ஓய்வுபெற்ற 21 நீதிபதிகள் தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு கடிதம் .. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் போது தீங்கு இழைக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் கருத்து.

*ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முயன்றால் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல்…. அமெரிக்காவின் உதவியில்லாமல் ஈரானை நெருங்குவது ஆபத்து என்பதால் பதிலடி திட்டத்தை கைவிட்டு இஸ்ரேல் அமைதி.

*இயல்பான அளவைவிட நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் தகவல் … முந்தைய ஆண்டுகளைப் போன்று ஜுன் மாதம் பருவ மழை தொடங்கிவிடும் என்றும் நம்பிக்கை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *