தலைப்புச் செய்திகள் (13-04- 2024)

*அன்பிற்கும் உண்டே அடைக்கும் தாழ் 1 என்னுடைய ச கோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் … கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்ததில் நேற்று ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது பற்றி ஸ்டாலின் கருத்து.

*தமிழக உளவுத் துறை ஐ.ஜி.செந்தில் வேலன் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலை பேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பதாக அதிமுக புகார் … தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரிக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.

*பிரதமர் மோடி போட்டியிடுவதாக இருந்த ராமநாதபுரம் தொகுதியில் அவருக்குப் பதிலாக போட்டியிடுகிறவர் ஓ.பன்னீர் செல்வம் என்று அண்ணாமலை பரப்புரை… ராமநாதபுரத்தை மோடி தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் பேச்சு.

*பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக பயப்படாது, அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது பழத்தை தூக்கிக்கொண்டு அலைவதாகவும் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் நடைபெற்றக் கூட்டத்தில் ஓ.பன்னிர் செல்வம் பற்றி விமர்சனம் … கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்காமல் மக்களை நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் விளக்கம்.

*மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு விடுமுறை என அறிவிப்பு.

*மதுரையில் நீண்ட நாட்களாக கிடப்பபில் கிடந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கியது … நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் கட்டுமானப் பணிகளை நிறுத்திவிடுவார்கள் என்று வலைதளங்களில் விமர்சனம்.

*தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் 22- ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிப்புஅரசு தடை விதித்தும் சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.

*தேர்தல் பத்திரங்கள் வாங்கியதில் இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத்தைச் சேர்ந்த மெகா என்ஜினியரிங்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு … ஜகதல்பூரில் உருக்கு ஆலை கட்டியதில் வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ 174 கோடியைப் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு ரூ 78 லஞசம் கொடுத்ததாக புகார்.

*மதுபான ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டெல்லி முதலமைச்சர் அரவி்ந்த் கெஜ்ரிவால் தம் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவை 15 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் … கைதுக்கு தடை விதிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரம் செயய் முடியாமல கெஜ்ரிவர்ல் சிறையில் இருக்க நேரிடும்.

*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களில் கூட வெற்றிப் பெறாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பொதுக் கூடத்தில் பேச்சு … மோடி கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.

*சவுதி அ ரேபியாவில் தூக்கில் போடப்பட இருந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் எடுத்த முயற்சியின் விளைவாக ரூ 35 கோடி திரண்டது … கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம் ரூ 35 கோடியை கொடுத்து ரகீமை கேரளா கொண்டு வருவதற்கு நடைபெறும் நடவடிக்கை குறித்து முதலமைச்சம் பினராயி விஜயன் நெகிழ்ச்சி.

*ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லா லெபனானில் இருந்து டிரோன்களை வீசி நடத்திய தாக்குதலை இஸ்ரேலின் வான் பாதுபாப்புப் படை தடுத்து நிறுத்தி பதிலடி … இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் லெபனானில் பலத்த சேதம்.

*ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் வணிக வாளகத்திற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதில் ஆறு பேர் உயிரிழப்பு.. . போலீஸ் நடத்திய பதில் தாக்குதல் மர்ம நபர் கொல்லப்பட்டதாக தகவல்.

*சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு விமான சேவை தொடங்கியது… சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.

*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,780க்கு விற்பனை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *