தலைப்புச் செய்திகள் (05-01-2023)

*குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி, சர்க்கரை ,கரும்புடன் சேர்த்து ஆயிரத்தையும் வழங்க முடிவு.

*பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பின் விலை ரூபாய் 33 ஆக நிர்ணயம்… கரும்பு உயரம் 5 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

*ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் 10 ஆம் தேதி வழங்கப்படும் … பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்கூட்டியே வழங்க நடவடிக்கை.

*நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து … தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவைதான் மத்திய அரசு திரும்ப அளிப்பதாகவும் விளக்கம்.

*மணல் குவாரிகளில் முறைகேடு என ஆர்.எஸ். என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை … ஏற்கனவே, இவ்விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

*கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… ஜனவரி 30, 31 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஆணை.

*அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற உத்தரவு … அமைச்சரை நீக்குவது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நீதிபதிகள் தீர்ப்பு.

*ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்..போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதை அடுத்து போக்குவரத்துத்துறை உத்தரவு.

*போக்குவரத்துத் துறை தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் சென்னையில் நாளை மறுதினம் மீண்டும் பேச்சு வார்த்தை … அமைச்சர் சிவசங்கரன் அறிவிப்பு.

*ஈரோடு பெருந்துறை அருகே கொலை குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடிக் கும்பல் அரிவாளைக் காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச்சூடு … நெல்லை களக்காட்டில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் துப்பாக்கிச் சூட்டையும் மீறி தப்பி ஓட்டம்.

*பெருந்துறையில் தப்பி நெல்லை பாளையங்கோட்டை சென்று பண்ணை வீட்டில் பதுங்கிய குற்றவாளிகள் ஐந்து பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தது போலீ்ஸ் … இரண்டு பேருக்கு காலில் முறிவு ஏற்ப்பட்டதால் தீவிர சிகிச்சை.

*திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அருள் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து … அருள் எந்த ஒரு தீவிர குற்றத்திலும் ஈடுப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நடவடிக்கை.

*சென்னை எண்ணூரில் மீனவர்கள் பத்தாவது நாளாக போராட்டம் .. வாயுக் கசிவு ஏற்பட்ட உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரிக்கை.

*சிவகங்கை நகராட்சியில் குடிநீர் மற்றும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக புகார் … அதிமுக சார்பில் அங்கு 12- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

*சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்து துணை வேந்தர் பணியை கவனிப்பதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு … மோசடி வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெகநாதன், ஜாமீன் நிபந்தனை பேரில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடும் நிலை.

*சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நெருங்குவதால் நாளுக்கு நாள் பக்தகள் கூட்டம் அதிகரிப்பு … காத்துக் கிடக்கும் பக்தர்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் உதவி.

*நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15-க்குள் தெரிவிக்க வேண்டுகோள்…ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்புமாறு அறிவுறுத்தல்.

*ஆதித்யா L1 விண்கலம் நாளை மாலை L1 புள்ளியை சென்றடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்… L1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் கண்காணிப்பு.

*இந்திய பணியாளர்கள் 15 பேருடன் சென்ற ‘MV Lila Norfolk’ கப்பல் செங்கடலில் சோமாலியா அருகே ஆயுதம் ஏந்திய நபர்களால் கடத்தல் …நிலைமையை சமாளிக்கி இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS சென்னை, சோமாலியா கடற்பரப்புக்கு விரைந்து சென்றது.

*பணக்காரர்கள் பட்டியலில் இரண்டே நாட்களில் முகேஷ் அம்பானியை இரண்டாவது இடத்திற்கு தள்ளி மீண்டும் முதலிடத்திற்கு வந்தார் கௌதம் அதானி … ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததால் அதானி நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததன் எதிரொலி.

*தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா ராணுவம் பீரங்கி மூலம் குண்டு வீச்சு …வடகொரியா 200- க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம்.

* குண்டு வீச்சுக்கு ஆளான தீவுப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவு .. பீரங்கி தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு.

*பாகிஸ்தானில் பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு நாடளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் … கடுமையான குளிர் நிலவுவதை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க தீர்மானம் நிறைவேற்றியதால் பரபரப்பு.

*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸட் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் எதிரொலி .. சர்வேதேச கிரிக்கெட் அமைப்பின் டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.

*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை கன மழை … வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்பு.

*தென் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் … சென்னை மற்றும் புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *