தலைப்புச் செய்திகள் (03-3-2024)

*பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழ்நாடு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு .. பெங்களூர் உணவு விடுதியில் இரு தினங்கள் முன்பு குண்டு வெடித்ததை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

*தமிழ்நாட்டில் நாளை கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழச்சியில் பங்கேற்கும் மோடி பின்னர் சென்னை நந்தனத்தி்ல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில பேசுகிறார் … அதிகமா ன மக்களை திரட்டிக் காட்டுவதற்கு பாஜக ஏற்பாடு.

*போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதைக் கண்டித்து சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் … போதைப் பொருள் கிடங்காக தமிழ்நாடு மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி புகார்.

*அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு முயற்சிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை … காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு இரண்டு லட்சம் பணியிடங்களை உருவாக்குமாறும் வலியுறுத்தல்.

*அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். …. மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை.

*புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு … வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என்று பேட்டி.

*நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகதத்தை குறைப்பதற்ககாக கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கி சதி …. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளதாக சீமான் பேட்டி.

*நாம் தமிழர் கட்சி முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் நிரந்த சின்னம் கிடைத்திருக்கும் , முறையாக விண்ணப்பிக்காமல் சின்னம் கேட்டால் எப்படி கிடைக்கும் ? சீமான் கட்சிக்கு சின்னம் கிடைக்காததற்கும் தனக்கும் என்ன சம்மந்தம் என்றும் அண்ணாமலை கேள்வி.

*சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்துத் தடமான கடற்கரை – தாம்பரம் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பகல் பொழுதில் புறநகர் ரயில்கள் இயக்கப் படவி்ல்லை … மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதல்பேருந்துகளும் மெட்ரோ நிர்வாகம் கூடுதல் ரயில்களையும் இயக்கியதால் நிலைமை சமாளிப்பு.

*தமிழ்நாடு மற்றும் புதுவையில் பிளஸ் 1 தேர்வுகள் நாளை தொடங்குகிறது … இரண்டு மாநிலங்களிலும் எட்டரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

*மாமல்லபுரம் கடற்கரையில் கடலில் மூழ்கியவர்களில் நேற்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று பேரின் சடலங்கள் இன்று மீட்பு … ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த மாணவர்கள் கடலில் குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.

*தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தியது சுகாதாரத் துறை … குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து செலுத்துதில் பெற்றோரும் ஆர்வம்.

*பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியா குமரி மாவட்டம் மண்டைக் காடு பகவதி அம்மன் கோயிலி்ல் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது … 10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.

*வங்கதேசம் மற்றும் பூட்டானை விட இந்தியாவில் வேலையற்ற இளைஞர்கள் அதிகம். பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையின்மை இரு மடங்காக உள்ளது…. அக்னிவீர் திட்டம் கொண்டுவந்தபின் ராணுவ வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது நியாயமற்றது என்றும் ராகுல் காந்தி புகார்.

*டெல்லி எல்லையில் முகாமிட்டு உள்ள விவசாயிகள் தலைநகர் நோக்கி பேரணி செல்லும் திட்டம் தொடரும் என்று அறிவிப்பு … மக்களின் ஆதரவை பெறும் வகையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு

*நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்பு ..நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி பிலவால் புட்டோ தலைமையிலான மக்கள் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

*பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள பலுசிஸ்தான் , கைபர் பக்துல்லா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கன மழை .. வெள்ளம் மற்றும் நிலச் சரிவில சிக்கி 37 பேர் இறப்பு.

*செங்கடலில் ஹவுதி போராளிகள் தாக்கியதில் சேதம் அடைந்த ரசாயண உரக் கப்பல் கடலில் மூழ்கியது … இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து நடைபெறும் தாக்குதலில் மூழ்கும் முதல் கப்பல்.

*மார்ச் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாட்டில் வழக்கத்கதை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் … சென்னை வானிலை மையம் தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *