தலைப்புச் செய்திகள் (04-03-2024)

*நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு….. எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை..

*பெங்களூரு – ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழந்த குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தது கர்நாடக அரசு….கடந்த மார்ச் 1-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் பாடுகாயம்.

*சென்னை கெருகம்பாக்கதில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல் துறையினர் தீவிர சோதனை. … கடந்த 1-ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மீண்டும் மிரட்டல். கோவை வடவெள்ளியிலும் பள்ளி ஒன்று மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபப்பு.

*புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல. அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது‌… மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

*பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்று மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு… மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒடுங்கிகள் அமைக்கப்படும்… ரூ.30 கோடி செலவில் வானகிரி மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு.

*கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிவானி நிறுவனம் உருவாக்கி உள்ள 500 மொகாவாட் ஈணு உலையின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு… சென்னை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் கல்பாக்கம் சென்றுவிட்டு திரும்பவும் சென்னை வந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

*தமிழ்நாட்டை அழிக்கவேண்டும் என்பதற்காகவே கல்பாக்கத்தல் ஈனுலைத் திட்டம் தொடங்கப்படுவதால் பிரதமருடன் ஸ்டாலின் பங்கேற்கவில்லை … திமுக விளக்கம்.

*தமிழ்நாட்டில் போதைப் பொருள் தங்கு தடையி்ன்றி கிடைப்பதால் பெற்றோர் அனைவரும் கவலையில் உள்ளதாக நந்தனம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு … பெற்றோர்களைப் போன்று தானும் கவலையில் உள்ளதாகவும் கருத்து.

*பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கறுப்புக் கொடி காட்ட காங்கிரசார் முயற்சி .. கே.வி. தங்கபாலு உள்ளிட்ட 150 பேர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைப்பு.

*போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் … சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி முழக்கம்.

*IT பணியாளர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி இழிவுப்படுத்துவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் …திமுக அரசின் சாதனைகளை தாங்க முடியாமல் அதிமுக ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் கருத்து.

*அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார்… மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் வாதம். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்திற்காக மார்ச் 12-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

*அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு … எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்தை போட்டு பாஜக ஓட்டு வாங்க நினைப்பது கீழ்த்தரமான அரசியல் என்று விமர்சனம்.

*புதுச்சேரி மாநில பாஜக வேட்பாளர் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை … மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு.

*கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு பாதுாகப்புக்காக நீதிமன்றத்தை நாடி இருப்பதாக சனாதானம் குறித்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் … சனாதனம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்று உதயநிதி தரப்பில் வாதம்.

*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான முருகன், ஜெயக்குமார், ரபார்ட் பயஸ் மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு தயார் … உயர்நீதிமன்றத்த்தில் தமிழக அரசு பதில்.

*இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு… 27 கோடி ரூபாய் செலவில் 7,040 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை.

*சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டுமானங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல். தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவு.

*முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப் பதியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு … வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் செந்தில் பாலாஜி மனுவுக்கு பதில்.

*சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தில் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி… kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக உள்ளே செல்ல முடியும் என்று விளக்கம்.

*பழனி கிரிவல வீதியில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது, வணிக நிறுவனங்கள் எதுவாக இருப்பினும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகன பார்க்கிங் வசதியை முறையாக செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தல்.

*டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் மார்ச் 12- ஆம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்று அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் … இது வரை அமலாக்கத்துறை 7 சம்மன்களை அனுப்பியும் ஆஜராகாமல் இருந்து வருகிறார் கெஜ்ரிவால்.

*தமிழ்நாட்டைப் போன்று டெல்லியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ ஆயிரம் வழங்க நடவடிக்கை … அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு.

*பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஷபாஷ் ஷெரீப் … இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழச்சிசியில் ஷெரிப்க்கு அதிபர் ஆரிப் அல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

*அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடைபெறும் தகுதித் தேர்தலில் வாஷிங்டன் டி.சி.யில் நிக்கி ஹாலேவுக்கு வெற்றி … இது வரை தகுதி தேர்வு நடைபெற்ற மாகாணங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ட்ரம்ப் இந்த வாஷிங்டன் டி.சி.யில் மட்டும் நிக்கி ஹலோவிடம் அதிர்ச்சித் தோல்வி.

*தமிழ்நாட்டில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாளப் படம் பெரும் வரவேற்பை பெற்றிருப்தாக தகவல் … கொடைக்கானலில் உள்ள குணா குகையில் மாட்டிக்கொண்ட இளைஞரை மீட்பது படத்தின் கதை.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *