தலைப்புச் செய்திகள் (02-03-2024)

*பிரதமர் மோடி மீண்டும் வாரனாசி தொகுதியில் போட்டி … முதற்கட்டமாக 195 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.

*பாஜக வெளியிட்டு உள்ள பட்டியல்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் காந்திநகர் தொகுதி வேட்பாளர் …. 195 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 28 பேர்,. முன்னாள் முதலமைச்சர்கள் 2 பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி.

*வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள 34 மத்திய அமைச்சர்களில் ஸ்மிருதி ராணிக்கு மீண்டும் அமேதி தொகுதி … மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திவனந்தபுரம் தொகுதி வேட்பாளர்,

*பெங்களூரில் ராமேஷ்வரம் என்ற உணபு விடுதியில் நேற்று குண்டு வெடிபுக்கு காரணமான பையை விட்டுச் சென்ற நபரை பிடிக்க போலீஸ் தீவிரம் .. சாப்பிட்டு விட்டு பையை வைத்துவிட்டுச் சென்ற நபரின் சிசிடிவி காட்சி வெளிட்டது காவல் துறை.

* பேருந்தில் வந்த நபர் தொப்பி அணிந்து, முகக் கவசமும் போட்டிருந்ததாக முதல்வர் சித்தராமய்யா பேட்டி … டைமர் செட் செய்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றும் இதன் பின்னணி என்ன என்று தீவிர விசாரண நடைபெற்றுவருகிறது என்றும் தகவல்.

*பெங்களூரு குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது காவல்துறை … பேருந்து நிலையங்கள் , தங்கும் விடுதிகள் போன்ற இடங்களில் சோதனை.

*திமுகவுடன் நட்பாக இருப்பதாகவும் தொகுதிப் பங்கீடு குறித்து டெல்லி தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசி வருவதாகவும் செல்வப் பெருந்தகை பேட்டி … தொகுதிப் பங்கீடு பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்.

*கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு… அணுமின் நிலையத்திற்கு நிலம் தந்த உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி நாளை உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து.

*குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…. பொய்யான செய்திகளை காணொலியில் பார்த்தாலோ, கேட்டறிந்தாலோ மக்கள் அச்சமடையவோ, பதற்றமடையவோ வேண்டாம் என்று வேண்டுகோள்.

*மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும்.. திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல்.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இப்போது 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு… 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த பின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி.

*சென்னையில் நாளை கடற்கரை-தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை ரத்து … பொதுமக்கள் வசதிக்காக நாளை ஏழு நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க முடிவு.

* ஐஸ்கிரீம்களின் விலையை ₹2 முதல் ₹5 வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிறுவனம் … புதிய விலை உயர்வு நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்.

*மாமல்லபுரம் கடலில் குளித்த 9 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது… 4 மாணவர்கள் மீட்பு, ஒருவர் உயிரிழப்பு, மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரம்.

*கோவையைச் சேர்ந்த MYV3 ADS நிறுவனத்தின் மூலிகைப் பொருட்களை தயாரிக்கும் விஜயராகவன் போலி மருத்துவர் என்று கோவை குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு … மதுரையில் கைது செய்யப்பட்ட விஜயராகவனை கோவைக்கு கொண்டு வந்து சிறையில் அடைக்க நடவடிக்கை.

*நாடாளுமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு அதிகமானவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவிப்பு … 85 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.‘

*பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியில் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பில்கேட்ஸ் உட்பட உலகின் பெரும் பணக்காரர்கள் குவிந்தனர்… பல நாட்டுத் தலைவர்களும் திரண்டு உள்ளதால் ஜாம் நகர் விழாக் கோலம் பூண்டது.

*ஜாம் நகர் விமான நிலலையத்திற்கு 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையத்தை அளித்துது இந்திய விமான கட்டுப்பாட்டுத் துறை…. அம்பானி மகன் திருமணி விழாவுக்கு வரும் வெளிநாட்டு பிரமுகர்களுக்காக சிறப்பு அனுமதி.

*தினமும் ஆறு விமானங்கள் இறங்கி ஏறுகிற ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமா ன நிலையம் என்ற தகுதியை கொடுத்து உள்ள மோடி அரசு அதைவிட முக்கியமான மதுரை விமான நிலையத்திற்கு சர்வேத விமான நிலையம் என்ற தகுதியை தர மறுக்கிறது… மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புகார்.

*கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிப்பு … அரசியலில் இருந்த விலக உள்ளதாகவும் தகவல்.

*காசா முனை மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த பல நூறு பேருக்கு சிகிச்சையும் போதிய மருந்துகளும் கிடைக்கவில்லை என்று புகார் … மனிதாபிமான உதவிகளை செய்து தருமாறு பலரும் வலியுறுத்தல்.

*அசோக் செல்வன், சாந்தனு நடித்த புளு ஸ்டார் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது … அமேசன் பிரைம் தளத்தி்ல் பார்க்க வாய்ப்பு.

*தமிழ்நாட்டில் கோடையில் வழக்கத்தை விட மூன்று டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும் … வானிலை மையம் தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *