தலைப்புச் செய்திகள் ( 01-03- 2024)

*சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…. வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் விடுவித்தப் பிறகும் அந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரிப்பதற்கு தடை கேட்டிருந்தார் பன்னீர்..

*போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் …. ஜாபர் தலைமறைவானதை அடுத்து வீட்டுக்கும் சீல் வைப்பு.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து…. ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் முதலமைச்சர் நீண்ட ஆயுள் மற்றும் நலமுடன் வாழவேண்டும் என்று செய்தி.

*பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை …குடும்ப உறுப்பினர்கள் உடன் கேக் வெட்டிக் கொண்டாட்டம். அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட ஏரளாமானவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து.

*மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைக்க விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று பிரேமலதாவுடன் அதிமுக நிர்வாகிகள் . வேலுமணி ,கே.பி. அன்பழகன், தங்கமணி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை … கூட்டணி குறித்து குழு அமைத்து பேச்சு நடத்தப்படும் என்று வேலுமணி பேட்டி.

*நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு … விரைவில் விரிவான மற்றும் எழுத்துப்பூர்வமான உத்தரவை பிறப்பிப்பதாகவும் அறிவிப்பு.

*பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு… 2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள பிரதமர் மோடி, கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.

* பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் … சட்டப்பேரவை செயலாளரைச் சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் மனு.

*நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ,பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விருப்ப மனு விநியோகம் மார்ச் 6 – ஆம் தேதி வரை நீட்டிப்பு .. இது வரை 1500 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் தகவல்.

*கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பிரபுவுக்கு சொந்தமான 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை…பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் சோதனை நடத்திய அதிகாரிகள் அடுத்ததாக கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. மீது குறி.

*அதிமுக முன்னாள் எம்.எல்,ஏ. பிரபு வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் … “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு சோதனை” என்று புகார்.

*நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமை சொன்னால் போட்டியிடுவேன் என்று அண்ணாமலை பேட்டி … மார்ச் 4 -ஆம் தேதி கல்பாக்கம் அணுமின்நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் அன்று சென்னை நந்தனத்தில் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளதாக தகவல்.

*பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு ஒதுக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு … விசாரணை மார்ச் 7– ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*அனைத்து தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு செயல்படுவதைக் கண்காணிக்க சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களை நியமிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் …. இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தாததால் சிவில் நீதிபதி தேர்வை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை சுட்டிக் காட்டி அறிக்கை.

*சென்னையில் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தனியார் தொலைக் காட்சிக்கு வந்த மிரட்டல் அழைப்பால் தலைமை செயலகம் முழுவதும் அதிரடியாக சோதனை…மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் காவல் துறை ஆய்வு.

*சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு … ₹23.50 உயர்ந்து ₹1,960.50க்கு விற்பனை…

*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

*வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை நடவடிக்கை. ” அதிகாரிகள் தேர்வுப் பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”-தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை.

*கடலூர் தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க சி.பி.சி.ஜ.டி. போலீசுக்கு மேலும் ஆறு மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…. விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் முன் வைத்த கோரிக்கை ஏற்பு.

*வரும் 3ம் தேதி ஞாயிறு அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் ரயில்கள் ரத்து.. தொடர்ந்து நான்காவது வாரமாக ஞாயிறு அன்று பராமரிப்பு பணிகளால் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

*தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா .. தனது ஐஏஎஸ் பொறுப்பையும் ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்.

*ஆரணி அருகே கடந்த 2013- ஆம் ஆண்டில் விவசாய நிலத்தில் மூடப்படாமல் கிடந்த ஆழ் துளை கிணற்றில் நான்கு வயது சிறுமி விழுந்து இறந்த வழக்கில் தீர்ப்பு … நில உரிமையாளர் சங்கருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் உத்தரவு.

*பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி மர்லினா இருவருக்கும் பனிப்பெண்னை கொடுமை செய்த வழக்கில் ஜாமீன் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு … சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்று நிபந்தனை.

*சென்னை அடுத்த வண்டலூரில் ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக பிரமுகருமான ஆரவாமுதன் நேற்றிரவு வெட்டிக் கொல்லபட்ட வழக்கில் 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண் … செங்கற்பட்டுக்கு கொண்டு வந்து காவலில் எடுத்து விசாரிக்க போலீ்ஸ் திட்டம்.

*சென்னை மெட்ரா ரயிலில் பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பேர் பயணம் .. பயணிகள் எண்ணிக்கை ஜனவரியை விட பிப்ரவரியில் லட்சத்து 51 ஆயிரத்து 624 பேர் அதிகம் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிக்கை.

*பெங்களூரில் ராமேஷ்வரம் கப்பே என்ற உணவு விடுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் 9 பேர் காயம் … தீவிரவாதச் செயலாக இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை.

*ராமேஷவரம் கப்பேவில் வெடிகுண்டுதான் வெடித்து உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தகவல் … காவல் துறை முறையான அறிக்கை அளித்தபிறகு அடுத்தக் கட்ட விவரத்தை தெரிவிக்க முடியும் என்றும் விளக்கம்.

*மராட்டிய மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டது… 48 தொகுதிகளில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா வுக்கு 20 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு.

*மேற்கு வங்க மாநிலத்தில் சந்தோஷ்காலியில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கண்டிக்காமல் மவுனம் காத்தது ஏன் ?.. அராம்பாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பேசிய மோடி, சந்தோஷ் காலியில் நடைபெற்ற சமூக விரோதச் செயல்களுக்குக் காரணமானவைரை திரினாமூல் காங்கிரஸ் காப்பாற்றியதாகவும் புகார்.

*போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடன் தம்மை தொடர்பு படுத்தி வலைதளங்களில் பரப்பப்படும் தகவலுக்கு இயக்குநர் அமீர் விளக்கம் … மது,விபச்சாரம், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான பாதையை பின்பற்றுகிற தம்மை , காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தால் செல்வதற்கு தயார் என்றும் வீடீயோ வெளியீடு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *