தமிழகத்தில் பட்டாசுஆலைகள், குடோன்களை கண்காணிக்க வேண்டும் – அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

ஜூன்.2

தமிழகத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு தமது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவில், சர்க்கார் கொல்லப்பட்டி விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் கவலைக் கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது , ஆகவே இந்த விடியா அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் ,அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்தஅரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *