சென்னை அருகே பா.ஜ.க. பிரமுகர் கொடூர கொலை… பதற்றம்

சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகமான ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பி பி ஜி சங்கர். பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வளர்பிறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ் சி,எஸ் டி,மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளனர்.இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. பின்னர் காரில் இருந்து வெளியேறிய பிபிஜி சங்கர் சாலையில் ஓடியுள்ளார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து பாதுகாப்பிற்காக 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *