செந்தில் பாலாஜியால் திமுக அரசுக்குக் கெட்ட பெயர்தான் ஏற்படுகிறது.

தருமபுரி, ஜுன் 4. வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூக நீதி பேசும் திமுக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போரட்டங்களை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அன்புமணி கூறியதாவது..

தமிழ்நாடு முதலமைச்சர், மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்றவர்களால் திமுக ஆட்சிக்கு கெட்டப் பெயர் தான் ஏற்படுகிறது. பணம் போட்டால் மது பாட்டில்களை தரக்கூடிய ஆட்டோமேட்டிக் மிசினை செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார். திமுக அதனை நிறுவிய அண்ணாவின் கொள்கைப்படி இயங்க வேண்டும்.

ஒடிஷா ரயில் விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தை ஒரு பாடமாகக் கொண்டு ரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுப் போன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். புல்லட் ரயில் கொண்டு வருவதை விட, ரயில் பயணிகளில் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி விபத்துகளை தடுப்பதும் கட்டாயம் ஆகும்.

கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்கள் திசை மாறி போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது‌. இதேப் போன்று மற்ற போடாடிகளும் நடத்தப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் பேசிய அமைச்சர், இது பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி காவிரி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால், நீராதாரம் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும். வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதி கொடுக்க் கூட முதலமைச்சர் மறுக்கிறார். அவர், இதனை அரசியலாக பார்க்கிறாரா என்றுத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி மாவட்டத்தில் தான் ஆனால் சிறுதானியத்தை கர்நாடகத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். கடந்த காலங்களில் பட்டுப்பூச்சிகள் கூட கர்நாடகத்தில் தரமாக இருப்பதாக கூறினார்கள் ஆனால் தருமபுரியில் கிடைப்பதுதான், தரமாக இருந்தது. இது போன்றவை எல்லாம் கமிஷன் வாங்குவதற்காக நடைபெறும் செயலாகும்.

இந்தியா முழுவதும், 40 மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 170 மருத்துவ கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் அங்கீாகரத்தை ரத்து செய்வதற்கு பிரதமர் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவிற்கு இன்னும் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவைப் படுகிறார்கள். ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீ காரத்தை திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் டெல்லிக்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பத்தூர் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டதாகக் கூறி 77 மது குடிப்பகங்களை மூடி உள்ளதாக கூறுகின்றனர். இவ்வளவு நாளாக இது காவல் துறையினருக்கு தெரியாமல் நடை பெறவில்லை. இவ்வளவு நாட்கள் அனுமதித்துவிட்டு இப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். இதுப் பற்றி கலைஞர் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றந்தான் மிஞ்சியது.

தமிழ்நாட்டில் 10 மாதங்களுக்கு முன்பு தான் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினார்கள். மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. கட்டணத்தை உயர்த்தினால் பாமக எதிர்த்துப் போராடும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

 

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *