15 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்

கோவை, ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

ஏப்ரல்.23

தமிழகத்தில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகப் பகுதிகளின்மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.23) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *