கோவையில் 26 லட்சம் காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன- டாஸ்மார்க் நிர்வாகம் தகவல்

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, பாட்டில்கள் திரும்ப பெறப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், ஒரு வாரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும், 10 ரூபாய் கூடுதலாக பெறப்பட்ட அதற்கான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் எனவும், பின்னர் வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபான பாட்டில்களை மதுபான கடைகளில் திருப்பிக் கொடுத்தால் பெறப்பட்ட 10 ரூபாய் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பத்து ரூபாய் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே சமயம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் திரும்ப வழங்கிய நிலையில், 10 ரூபாய் அவர்களுக்கு திருப்பித் தரப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்த ஒரு வார காலத்தில் 26 லட்சத்து 96 ஆயிரத்து, 71 காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்கு மண்டலத்தில் 166 மதுபான கடைகளில் 17,56,997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12,91,506 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 4,65,491 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெற்கு மண்டலத்தில் 139 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 19,24,708 மது பாட்டில்களில் 14,04,565 காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் 5,20,143 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை என்றும் கோவை மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் கூறியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *