கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு -சிபிசிஐடி விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையரிடம் 3 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

ஏப்ரல்.20

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், கேரளாவை சார்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியது.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் சயான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, 2021 ஆம் ஆண்டு ஏ டி எஸ் பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அந்த தனிப்படை, இதுவரை சுமார் 316 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் திடீரென சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏ.டி.எஸ். பி முருகவேல் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 49 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பா, கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சென்னை ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையராக உள்ள கனகராஜிடம் சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஆவடி சிஐடி காவலர் குடியிருப்பில் உள்ள கனகராஜன் வீட்டிற்கு சென்று, காலை 3 மணிநேரம் விசாரணை நடத்தி சென்றனர்.

தற்போது சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்ட ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜ், இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *