காலைதூக்கி தோளில் போட்டுக்கொண்டு செயல்படாதீங்க – கடுப்பான அமைச்சர் நேரு

காலை தூக்கி தோளில் போட்டுகொண்டு செயல்படாதீர்கள் என்றார் அமைச்சர் கே.என்.நேரு. நான் சொன்னது கால் மட்டும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது . தர்மலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார் .

தமிழக முழுவதும் கிராமம், நகரம் ,ஒன்றிய, பேரூர், வட்ட கிளை பகுதிகளில் சிறப்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், திமுகவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இது நடைபெற வேண்டும் என்று தலைவர் நமக்கெல்லாம் உத்தரவிட்டிருக்கிறார் . இதனால் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட வேண்டும். அதிமுகவில் அடிக்கடி சொல்வார்கள்; ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பார்கள் . அதனை நாம் மாற்றி தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை செய்ய வேண்டும். தற்போது நமது கட்சியில் 90 லட்சம் பேர் உள்ளார்கள் . ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தலைவர் கூறியிருக்கிறார். ஆனால் நாம் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அமைச்சர் நேரு.

தொடர்ந்து அமைச்சர் நேரு தனது பேச்சில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று சொல்லுவார் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு நம்முடைய தலைவரின் செயல்பாட்டினால் எதிரிகள் முன்னேற முடியாத நிலை ஏற்படுத்தி வருகிற தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. திமுகவினர் சட்டமன்றத் தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அனைவரும் பொறுப்பை உணர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் . நாம் மேயராக இருக்கிறோம், சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு காலை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு செயல்படக் கூடாது என்றார்.

அவர் மேலும், நான் சொன்னது கால் மட்டும்தான் என்று குறிப்பிட்டு சொன்ன போது கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *