காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஆட்கள் வந்ததைக் கண்டு தப்பியோடினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனமான இண்டிகேஷ்(INDICASH) என்கிற ஏடிஎம் மையமானது அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார், கைரேகை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடையங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கொள்ளை முயற்சி குறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்திலுள்ள சிசிடிவி காமிரா மற்றும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காமிராகாட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தனியார் ஏடிஎம்- ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் காஞ்சிபுரம் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.