கர்நாடகவில் மே 10 வாக்குப்பதிவு….. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *