ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கு இது தான் காரணம் – அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாலசோரில் விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலசோர், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2-வது நாளாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டு, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். விபத்து நடத்த இடத்தில் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரெயில் சேவையை மீண்டும் துவங்கும் என்று கூறிய அவர் ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *