ஐ.பி.எல். – குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அதிர்ச்சி தோல்வி…!

குஜராக் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியது லக்னோ அணி. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமயிலான லக்னோவும் , ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். லக்னோ சார்பில் குருனால் பாண்டியா , ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ விளையாடியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் , கைல் மேயர்ஸ் சிறப்பாக ஆடி 55 ரன்கள் சேர்த்த நிலையில் மேயர்ஸ் 24 ரன்களில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குருனல் பாண்டியா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். இதனால் லக்னோ அணி வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது.

கடைசி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில், லக்னோ அணிக்கு 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தது. தொடர்ந்து பூரன் 1 ரன்களில் வெளியேறினார். குஜராத் சிறப்பாக பந்துவீசிய நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை குஜராத் அணியின் மோஹித் சர்மா வீசினார். கே.எல். ராகுல் மற்றும் படோனி களத்தில் இருந்தனர். முதல் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல் அடுத்த பந்தில் , 61 பந்துகளில் 68 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து படோனி , ஹூடா , இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார். இறுதில் 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 128ரன்கள் எடுத்து லக்னோ அணி தோல்வி அடைந்தது. இதனால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *