என்.ஐ.ஏ சட்டம் - பாஜக அப்துல்லா குட்டி விளக்கம்

என்.ஐ.ஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல..! – பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி விளக்கம்

ஏப்ரல்.21

பாஜக கொண்டுவந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

காங்கிரசும், திமுகவும் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். என்.ஐ.ஏ முஸ்லிம்களை அல்ல ஜிஹாதிகளை கைது செய்கிறது. என்.ஐ.ஏ., ஜிஹாதிகளுக்கு எதிரானது.

கர்நாடகத்தில் குஜராத்தில் இருந்ததுபோல முன்னேற்றம் உண்டாகும் என்பதால் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடையும். கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களை பெறும். குறைந்த விலையில், வசதியாக புனித யாத்திரை செல்லும் வகையில் ஹஜ் கமிட்டியின் புதிய கொள்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *