எதிர்வரும் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சி கட்சிகளும் ஒன்றிணைந்து ஒன்றாக போட்டியிட முடிவு.. கார்கே தகவல்

அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கார்கே மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று இங்கே, ராகுல் ஜி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் ஜி மற்றும் தேஜஸ்வி ஜி மற்றும் கட்சி தலைவர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளோம். நாங்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நடத்தினோம்.

பல விஷயங்களை பற்றி விவாதித்தோம். அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதுவே இன்று எங்களின் முடிவு என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னான் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியதாவது: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை இது. எதிர்க்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையை வளர்த்துக் கொண்டு முன்னேறுவோம்.

நாட்டுக்காக ஒன்றாக நிற்போம். கார்கே ஜி கூறியது போல்.. நிதிஷ் ஜி கூறியது போல்.. இது மிக முக்கியமான நடவடிக்கை. பா.ஜ.க.வை தோற்கடிக்க எத்தனை எதிர்க்கட்சிகள் தேவை என்று கேட்கிறீர்கள்?. இது ஒரு செயல்முறை. எத்தனை பேர் எங்களுடன் சேர விரும்பினாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக தொடர்வோம். நாங்கள் நாட்டிற்காக ஒரு சித்தாந்த போரில் இருக்கிறோம். நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தேசத்தின் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *