உதகையில் களைகட்டிய கோடை சீசன் – கோலாகலமாகத் தொடங்கியது 136வது குதிரை பந்தயம்

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின் தொடக்கமாக குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, உதகையில் இன்று 136வது ஆண்டாக குதிரை பந்தையம் நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்த பந்தயத்தில் சென்னை, மும்பை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 550 குதிரைகள் கலந்துகொண்டுள்ளன. அவற்றுடன் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்களும் வந்துள்ளனர். இந்த நிகழ்வின் முக்கிய பந்தயமான நீலகிரி 1000 கின்னீஸ் ஏப்ரல் 14ஆம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்ரல் 15ஆம் தேதியும், நீலகிரி தங்க கோப்பை மே 21ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதி பந்தயமானது மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குதிரை பந்தையத்தை காண உதகையில் குவிந்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *