நீட் தேர்வு - விண்ணப்பிக்க இன்றே கடைசி

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான “நீட்தேர்வு2023” – ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

ஏப்ரல்.15

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பு 2023 கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி தொடங்கியது. அதன்படி விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று (ஏப்.15)கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதைத் தொடர்ந்து, வரும் மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 499 நகரங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *