கேரளப் பெண்ணின் டிவிட்டர் பதிவு - சத்குரு பதில்

இறக்கப் போகிறேன்..இறுதி விருப்பம் நிறைவேற உதவுங்கள்..! – கேரள பெண்ணின் பதிவுக்கு சத்குருபதில்!

ஏப்ரல்.20

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண், தான் இறக்கப்போவதாகவும், தனது இறுதி விருப்பம் நிறைவேற உதவுங்கள் என தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, சத்குருவின் பதில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக வலைதளங்கள்‌ பொழுதுபோக்கானவை என்பதையும் தவிர, சில நேரங்களில்‌ பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்வதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நம்‌ நெஞ்சை தொட்டுவிடும்‌ சம்பவங்களையும்‌ நடத்தி விடுகிறது. அந்த வகையில், கேரளப் பெண் ஒருவருக்கு டிவிட்டர் மூலம்‌ ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்‌ நடந்துள்ளது.

காயத்ரி என்ற கேரளப் பெண் ஒருவர், தன்‌ இறுதி விருப்பம்‌ குறித்த பதிவொன்றை டிவிட்டரில்‌ பதிவிட்டு இருந்தார்‌. அதில்‌ “சத்குரு அவர்களை சந்திப்பது என்பது என்‌ வாழ்நாள்‌ விருப்பமாக இருந்து வருகிறது. நான்‌ வாழ்வதற்கு இன்னமும்‌ சில மாதங்கள்‌ மட்டுமே எஞ்சி இருக்கிறது என நவீன அறிவியல்‌ சொல்கிறது. யாரேனும்‌ நான்‌ என்‌ குருவை சந்திக்க உதவ முடியுமா? என்‌ இறுதி விருப்பம் நிறைவேற தயவுசெய்து உதவி செய்யுங்கள்‌.” என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பெண்ணின்‌ உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு பதில்‌ அளித்துள்ளார்‌. அவர்‌ பதிவிட்டுள்ள ட்வீட்டில்‌ கூறியிருப்பதாவது, வணக்கம்‌ காயத்ரி. நான்‌ தற்போது பாரதத்திற்கு வெளியே பயணத்தில்‌ இருக்கிறேன்‌. உணர்வளவில்‌ நான்‌ உங்களுடன்‌ இருக்கிறேன்‌. திரும்பும்போது உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்‌. மிகுந்த அன்பும்‌ ஆசியும்‌ ” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரளப் பெண்ணின் கடைசி ஆசையும், அதற்கு சத்குரு அளித்த பதிலும் தற்போது சமூக வலைத்தளங்களில்‌ வைரலாகப் பரவி பலரின்‌ வரவேற்பையும்‌, பாராட்டுகளையும்‌ பெற்று வருகிறது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *