ஏப்ரல்.21
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை, கோவையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாராக அங்கீகரித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.மா.வேலுசாமி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செ.மா.வேலுசாமி, தொண்டர்களின் உணர்வை மதித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தொண்டர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி. கொண்டு வந்த திருத்தங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.