விநாயகர் வழிபாடு தோன்றியது எப்படி ?

இந்து சமய வழிபாட்டில் முதல் கடவுளாக போற்றப்படும் கணபதி வழிபாடு, கடந்த ஏழாம் நூற்றாண்டில தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளது,

பல்லவ அரசர் முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதி.

இவர் முதலாம் நரசிம்மனின் உத்தரவின் பேரில் கிபி 642- ஆம் ஆண்டில் வாதாபி (இப்போது பதாமி, கர்நாடகா) நகரத்தை ஆண்ட சாளுக்கிய அரசர் புலகேசியின் மீது படையெடுத்துச
சென்று வென்றார்.

போரில் வெற்றி பெற்ற பிறகு, பரஞ்சேதி அந்த கோட்டையின் சுவர்களில் தென்பட்ட விநாயகர் சிலையை தனது ஊரான திருச்செங்காட்டங்குடிக்கு கொண்டு வந்து வாதாபி கணபதி என வழிபாடு செய்தார்.

திருவாரூர் அடுத்து உளள் திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி கோவிலில் இந்த சிலை உள்ளது.கோவில்இ சைவ மரபில் பாடல் பெற்ற சிவ ஆலயமாகக் கருதப்படுகிறது.

இந்த விநாயகர் சிலை மனிதத் தலை கொண்ட ஒரு அரிய வடிவத்தில் காணப்படுகிறது, இது பொதுவாக காணப்படும் யானைத் தலை விநாயகருக்கு மாறானது.இந்த விநாயகருக்காக முத்துசுவாமி தீக்ஷிதர் எழுதிய “வாதாபி கணபதிம் பஜே” என்ற கர்நாடக இசை கீர்த்தனை மிகவும் பிரபலமானது.

போரில் வெற்றி பெற்ற பிறகு, பரஞ்சோதி ஆன்மீக மாற்றம் அடைந்து சிவ பக்தராக மாறினார்.அவர் பின்னர் சிறுத்தொண்டர் நாயனார் என அழைக்கப்பட்டு, 63 நாயன்மார்கள் பட்டியலில் இடம் பெற்றார்.

அவரது வாழ்க்கை சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதி சிவகாமி சபதம் என்ற நூலும் வாதபி பற்றி விரிவாக பேசுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *