இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர், இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவிகிதமாக உயர்த்தி 4 நாட்கள்தான் ஆகிறது. இந்த வரி உயர்வுக்குப் பிறகும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொள்ளவில்லை என்பதால் டிரம்ப் ஆத்திரத்தின் உச்சிக்குப் போயிருப்பதை புலப்படுத்துவதாக அவருடைய மிரட்டல்கள் உள்ளன.
உக்ரைன் நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாக குற்றஞ்சாட்டி வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் மிரட்டி இருக்கிறார்.