ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இது, கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்ட படம். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிகெட் வீரர் கபில்தேவும் சில காட்சிகளில் வருகிறார். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்., ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனைContinue Reading

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போய் இருப்பதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 45 அடிகள் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்குContinue Reading

ஜூன்.5 தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ளContinue Reading

மே.26 சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகின்றனர். இதில்,Continue Reading

மே.22 கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் ஆந்திரா, தெலங்கானா, உ.பி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்து வரிசை,Continue Reading

மே.22 கோவை மத்திய சிறையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசுContinue Reading

மே.21 கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக ஜமேசா முபின் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கியதாக என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஜமேசா முபின் என்பவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்தது. இதில் ஜமேசா முபின் உயிரிழந்தார். இவ்வழக்கில், முபின் உறவினர்கள்Continue Reading

மே.18 கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் 5 அடி நீள சாரைப்பாம்பு திடீரென நுழைந்ததால், அச்சமடைந்த பணியாளர் தெறித்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேநீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு, செல்போன் ரேக் வழியாக நகர்ந்து,Continue Reading

மே.18 கோவையில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கான மாத கட்டணத்தை ரூ.3540ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார். கோவை‌ மாநகராட்சியில் திறன்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்‌ கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‌பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த வாகன நிறுத்துமிடத்தின் துவக்க நாளிலிருந்து வாகன நிறுத்தம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படி வாகனContinue Reading

மே.12 கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பயன்படும் வகையில், அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவினாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் பலத்தContinue Reading