தலைப்புச் செய்திகள்(27-01-2024)

*பீகார் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளாக ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொண்டதை அடுத்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதீஷ்குமார் … ஞாயிறு அன்று ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை கொடுத்து பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு.

*கடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது … பிறகு பாஜக உறவை முறித்துக் கொண்ட நிதீஷ் , லாலு பிரசாத் தலைமையிலான ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து முதலமைச்சர் ஆகியிருந்தார்.

*பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை … நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் -45, பா.ஜ.க.- 78 உடன் சேர்த்து 127 எம்.எல்.ஏ.க்கள் ஒரு பக்கம் … லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி- 79, காங்கிரஸ் – 19, இடது சாரிகள்-15 என இந்தப் பக்கம் -115 எம்.எல்.ஏ.க்கள்.

*நிதீஷ் ராஜினாமா செய்த பிறகு தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க முதலில் அழைக்க வேண்டும் என்று லாலு பிரசாத் தலைமையிலான ஆர்.ஜே.டி. வலியுறுத்தல்…. மேலும் நிதீஷ்குமார் கட்சியை உடைக்க லாலு பிரசாத் முயற்சிப்பதாகவும் தகவல்.

*உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு… இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.

*வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக அரசு முறைப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் புறப்பட்டார்… 8 நாள் பயணத்தில் முதலில் துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்கிறார்.

*தமிழகத்தில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்… திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்.திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக மாற்றம்.

*திருச்சியில் விசிக மாநாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து … கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உத்தர குமார், யுவராஜ் உட்பட 3 பேர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்.

*சேலம், கோவை ஆகிய இரு மாவட்ட நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை… சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் பங்கேற்பு.

*நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது நாம் தமிழர் கட்சி… நெல்லை தொகுதி வேட்பாளராக, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா, தென்காசி தொகுதிக்கு மயிலை ராஜனை வேட்பாளராக அறிவித்தது நாம் தமிழர் கட்சி தலைமை.

*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிற்கான மேலிட பார்வையாளராக அரவிந்த் மேனனை நியமித்தது பாஜக …. புதுச்சேரி மாலித்திற்கான பார்வையாளராக நிர்மல் குமார் சுரானா நியமனம்.

*கேரளா மாநிலத்தில் கொட்டரக்கார என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அணி போராட்டம் … காரை விட்டு இறங்கிய ஆளுநர் அருகில் இருந்த டீக் கடை ஒன்றில் இரண்டு மணி நேரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுட்டதால் பரபரப்பு.

*போராட்டம் நடந்த இடத்திற்கு விரைந்த கேரள மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து, மாணவர்கள்17 பேர் வழக்குப் பதியபட்டு இருப்பதாக விளக்கம் … ஆளுநருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவு.

*செங்கடலில் பிரிட்னை சேர்ந்த எண்ணெயக் கப்பலான எம்.வி. மர்லின் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி போராளிகள் குழு ஏவுகணைகளை வீசித்தாக்குதல் … அவசர உதவி கோரியதை அடுத்து இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் மீட்புப் பணிக்கு விரைந்தது.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *