தலைப்புச் செய்திகள்(30-12-2023)

*பரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் தொடர்பாக முதல்வரை அழைத்துப் பேசும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததை அடுத்து சந்திப்பு.

*நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. உச்சநீதிமன்ற கருத்துகளை மனதில் கொண்டு நிலுவை மசோதாக்கள், கோப்புகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை.

*அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில் தேவையின்றி ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்…. 10 மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைத்திட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

*அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு தொடர கோரும் கோப்புகளுக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்… ஆளுநர் ரவியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

*சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. ரூ 400 கோடி செலவில் 88 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது புதிய பேருந்து நிலையம்.

*சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான SETC, TNSTC. PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு… கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலயைத்திற்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்க உள்ளதாகவும் அமைச்சர் தகவல்.

*புதுக்கோட்டை அருகே சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்து விபத்து … டீக்கடைக்குள் இருந்த 5 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு, 19 பேர் படுகாயம்.

*நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு … 11,12 வகுப்புகளுக்க ஜனவரி 4 முதல் 11- ஆம் தேதி வரை தேர்வு. 6 முதல் 10- ஆம் வகுப்புகளுக்க ஜனவரி 4 முதல் 10- ஆம் தேதி வரை தேர்வு.

*ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.. இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள்.

*கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் தினமும் அஞ்சலி செலுத்த கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று பிரேமலதா அறிவிப்பு… மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள்.

*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரில் கடலில் குளித்த நான்கு பேர் அலையில் சிக்கி உயிரழப்பு … உடலை தேடும் பணி தீவிரம்.

*பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் மோடியால் காணொலி மூலம் திறந்து வைப்பு… தினமும் காலை 5 மணிக்கு கோவையில் புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூர் சென்று திரும்புகிறது.

*திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை ஜனவரி 2 – ஆம் தேதி பிரதமர் தொடங்கிவைப்பதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு … பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்பதால் நகரத்திலும் கூடுதல் பாதுகாப்பு.

*ராமர் கோயில் ஜனவரியில் திறக்கப்பட உள்ளதை அடுத்து புதுப்பிக்கப்படட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி… ஆறு வந்தே பாரத் ரயில்கள் உட்பட எட்டு ரயில்களின் சேவைகளம் பிரதமரால் தொடங்கிவைப்பு.

*ஜனவரி 22 அன்று வீட்வீடில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை… அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை உற்சாகமாக கொண்டாடுமாறும் பேச்சு.

*பிரதமர் மோடி வருகையால் அயோத்தி நகரம் விழாககோலம் பூண்டது .. மகரிஷி வால்மீகி என்ற பெயர் சூட்டப்பட்ட புதிய விமான நிலையமும் மோடியால் திறந்துவைப்பு.

*டெல்லி, இமாச்சல், அரியானா உட்பட வட இந்திய மாநிலங்களில் வெப்ப நிலை 7 டிகிரி சென்டிகிரேடை தொட்டது .. சாலைகளை கடுமையான பனி மூட்டம் சூழ்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு.

*உக்ரைன் நாட்டில் தலைநகரம் கிவ், ஒடேசா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் விடிய,விடிய நடத்திய தாக்குதலில் 30 பேர் இறப்பு, 200 பேர் காயம்.. போர் தொடங்கிய கடந்த 22 மாதங்களில் ரஷ்யா நடத்திய கடுமையான தாக்குதல் என்று கருத்து.

*அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டொனால் டிரம்ப் போட்டியிடுவதில் சிக்கல் வலுக்கிறது .. கடந்த தேர்தலில் தோற்ற போது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கொலோரடா மாகாணத்தை அடுத்து மைனோ மாகாண நீதிமன்றமும் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து உத்தரவு.

*சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதை அடுத்து ஜனவரி 15 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.. உடனடி பதிவு மூலம் தினமும் விநியோகிக்கப்பட உள்ள15 ஆயிரம் டிக்கெட்டுகளில் ஒன்றை பெற மட்டுமே பக்தர்களுக்கு வாய்ப்பு.

*ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்க வரலாற்றை மையமாக வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய வியூகம் என்ற தெலுங்கு படத்தை திரையிடுவதில் சிக்கல் … சந்திரபாபு நாயுடுவை மோசமாக சித்தரிப்பதால் அவருடைய மகன் தொடர்ந்ததால் படத்தை வெளியிட ஜனவரி 11 வரை ஆந்திரா உயர்நீதிமன்றம் தடைவிதிப்பு.

*திருமண ஜோடி தேடும் இணையதளத்தில் வாடகைக்கு வீடு எடுத்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் பழகுவதற்கு தோழிகளை தேடிய பெங்களூர் இளம்பெண்… எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு வலைதளத்தில் வைரலானது.

*நெல்லை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார் நடிகர் விஜய் … ஒவ்வொருவருக்கும் ரூ ஆயிரம் மதிப்புள்ள தொகுப்புகள்.


*மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்வதால் சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணியில் திறப்பு.. வெள்ள அபாயம் இல்லை என்று அதிகாரிகள் அறிவிப்பு.

*தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் … நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *