தலைப்புச் செய்திகள் (31-03-2024)

*தாமதமாக கணக்கை தாக்கல் செய்தது, அபராதம் மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் சேர்த்து மேலும் ரூ 1745 கோடி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ்…இதனையும் சேர்த்தால் காங்கிரஸ் ரூ 3547 கோடி கட்டவேண்டும்….உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு.

*சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்…. டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2-ஆம் தேதி ஆஜராக உத்தரவு…ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்குவதால் அமீருக்கு சிக்கல்.

* மறைந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்…. கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை.

*தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜகவை அறிமுகம் செய்துவைத்தே அதிமுகதான் என்று சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்… தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று பாஜக நிர்வாகிப் பேச்சுக்குப் பதிலடி.

*இலங்கைக்கு கச்சத்தீவை விட்டுக் கொடுத்தற்கு காங்கிரசும் திமுகவுந்தான் காரணம்… ஆர்டிஜ மூலம் பெறப்பட்ட தகவல்களை செய்தியாளர்களிடம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

*சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவின் காரை சோதனை செய்யாமல் அனுப்பியதாக புகார்…. பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதா சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நடவடிக்கை.

*புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு….10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

*மதுரை திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வரும் எம். எஸ். ஷா மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார். … திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாலணை.

*டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் போராட்டம்….மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு.

*பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் என்று டெல்லி போராட்டத்தில் ராகுல் காந்தி புகார்….ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது என்றும் கருத்து.

*பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு…. பிரதமர் நரேந்திர் மோடியும் நிகழ்ச்சியில் பங்கேற்பு.

*கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது… கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை பகிர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு.

*ஆயுதங்களால் ஒரு போதும் அமைதி ஏற்படாது … ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு போப்பாண்டவர் செய்தி.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *