தலைப்புச் செய்திகள் (28-03-2024)

*தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு … முறைன்றயான ஆவணங்கள் இணைக்கப்படாத சுயேட்சைகளின் மனுக்கள் ஆங்காங்கு நிாரகரிப்பு.

*கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மனு, தகவல்கள் சரியாக இல்லை என்ற புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட் டு பின்னர் ஏற்பு…. சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அனுமதி.

*போட்டியில் இருந்து விலகிக்கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு நாளை மறுதினம் கடைசி நாள் . .. களம் காணும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

*நூறு நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மாநில வாரியாக உயர்த்தியது மத்திய அரசு.. .தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ₹294ல் இருந்து 319ஆக தினசரி ஊதியம் அதிகரிப்பு.

*தங்கம் விலை முதன் முறைாயக சவரன் ரூ.50,000-ஐ தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு ரூ.50,000-க்கு விற்பனை.

*தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறுகிறது.

*நெல்லை தொகுதியில் போட்டி வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராமசுப்பு மனுவை திரும்பப் பெறுவதாக பேட்டி … காங்கிரஸ் தலைமைக்கு தமது அதிருப்தியை தெரிவிக்க மனுத் தாக்கல் செய்ததாக விளக்கம்.

*மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4 -ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கையில் பிரச்சாரம் … சென்னையில் மறு நாள் வாக்கு சேகரிக்க இருப்பதாக பாஜக தகவல்.

*முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத், நடிகர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக பேட்டி … கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப் பெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திர நாத் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

* ஈரோடு தொகுதி மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி கோவை மருத்துவமனையில் காலமானார் … இரண்டு தினங்களுக்கு விஷம் குடித்ததை அடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

*மதிமுக கடந்த 1993 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வைகோவுக்கு பக்க பலமாக இருந்தவர் கணேசமூர்த்தி … நாடாளுமன்றத்திக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கணேச மூர்த்தி இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்தார் என்றும் தகவல்.

*டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மேலும் நான்கு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி…. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கலைக்க பாஜக சதிசெய்வதாக கெஜ்ரிவால் புகார்.

*நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள 88 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம் … 12 மாநிலங்களில் உள்ள இந்த 88 தொகுதிகளிலும் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப் பதிவு.

*அருணாசல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் பிமா காண்டு உட்பட பாஜகவின் ஐந்து வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு …ஐந்து குதிகளிலும் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

* தேர்தல் பத்திரம் மூலம் பணம் திரட்டியது உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் விமர்சனம் … ஊழலுக்கு காரணமான பாஜகவை தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என்றும் கருத்து.

* மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஸியாமி அமெரிக்காவின் டெஸ்லா கார்களை சீனாவில் தயாரிக்க திட்டம்… மின்சார கார்களில் டெஸ்லா உலகத்தின் முதலிடத்தில் உள்ளது.

*திரைப்பட நடிகர் சித்தார்த்துக்கும் சக நடிகையான அதிதி ராவுக்கும் தெலுங்கானாவில் வனர்பர்த்தி என்ற இடத்தில் திருமணம் … விழாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றதாக தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *