தலைப்புச் செய்திகள் (28-02-2024)

*முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு … எட்டு மாதங்களாக சிறையில் இருப்பதாக தெரிவிப்பதால் வழக்கை இன்னும் மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை.

*கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர், ஓட்டுநர் வேலை தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதில் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது என்பது அமலாக்கத் துறை வழக்காகும் .. . கடந்த ஜூன் மாதம் சென்னை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட்டது.

*முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் உயிரிழப்பு… சிறையிலிருந்து விடுதலை ஆகி முகாமில் தங்கியிருந்த சாந்தன், இலங்கை செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் மரணம்.

*தூத்துக்குடி துறைமுக வாளகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் குலேசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி … தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்படுத்தப்பட்டு உள்ள புதிய திட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள கலங்கரை விளக்கங்கள் ஆகியவையும் தொடங்கிவைப்பு.

*தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி முதலில் தேசியகீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைத்தும் தொடங்கப்பட்டது .. நிகழச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் , மாநில அமைச்சர் வேலு, நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

*காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கையாக இருந்த அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன… மக்களின் சேவகனாக இருந்த திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடி பேச்சு.

*குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியதை அடுத்த ரோகினி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாட்டம் … ரோகிணி ராக்கெட்டில் காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

*இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமான குலசேகரப்பட்டினத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என்று இஸ்ரோ தலைவர் சோம் நாத் நம்பிக்கை.. ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றும் பேட்டி.

*குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவைப்பட்ட 2200 ஏக்கர் நிலததை மின்னல் வேகத்தில் ஒதுக்கி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி … முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமர் பெருமிதம்.

*காங்கிரசும் திமுகவும் சம்பாதிக்க நினைக்கிறது , வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது என்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு … குடும்ப அரசியிலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

*பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, அவருடைய கணவர் பன்னீர் செல்வம் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்ளில் லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை … நகர் மன்றத் தலைவராக இருந்த போது பன்னீர் செல்வம் டெண்டர் கொடுப்பதற்கு ரூ 20 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று பதியபட்டு உள்ள வழக்கில் நடவடிக்கை.

*மார்ச் 2, 3 மற்றும் 4- ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும், முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் … திமுக தலைமை அறிவிப்பு

*ஈரோட்டில் மத்திய அரசுக்கு எதிராக ஐந்தாயிரம் ஜவுளிக் கடைகளை அடைத்து துணி வியாபாரிகள் போராட்டம் … மார்ச் 31 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள வருமான வரிச் சட்டத் திருத்தததை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தல்.

*ஜவுளி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரோடு,பள்ளிப்பாளையம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் விசைத்ததறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் …. 50 ஆயிரம் விசைத் தறிகள் இயங்காததால் பல கோடி ரூ பாய் மதிப்புள்ள உற்பத்தி பாதிப்பு.

*நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி… உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? என்று துணைவேந்தருக்கு நீதிபதி இளந்திரையன் கேள்வி.

*தமிழ்நாட்டில் நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ள பிளஸ் 2 தேர்வுகளில் பங்கேற்க ஏழரை லட்சம் மாணவ-மாணவிகள் ஆயத்தம்… காப்பி அடிப்பவர்களை தடுப்பதற்கு பறக்கும் படை மூலம் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு.

*மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் சங்கு எடுக்க மீனவர்களுக்கு மீன்வளத்துறை அனுமதி தரக் கூடாது … உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்…எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்ற தமிழக அரசு விளக்கம்.

*இமாச்சல் பிரதேசத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி, பாஜக வேட்பாளரிடம் தோற்றதால் சர்ச்சை … முதலமைச்சர் சுக்விந்தர் சுகு அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக பாஜக புகார்.

*மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவலக்கு சுக்விந்தர் சிங் மறுப்பு … காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று நம்பிக்கை.

*காங்கிரஸ் அரசு பதவி விலக் கோரி இமாச்சல் சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமளி …. 15 பேர் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் நடவடிக்கை.

*இமாச்சல் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சிம்லாவுக்கு விரைவு … கர்நாடகத்தில் நேற்று நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் பக்கம் இழுத்த சிவக்குமார் மீது மேலிடம் நம்பிக்கை.

*கர்நாடாகத்தில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சையத் நாசர் ஹுசைன் வெற்றிபெற்றதும் அவரது ஆதரவாளர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டதாக பாஜக புகார் … தேசிய புலனாய்வு முககை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தல்.

*நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 22 கோடி … வெற்றி தோல்வியை நிர்ணயப்பதில் முக்கிய பங்கு வகிக்க இருக்கும் இளம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் தீவிரம்.

*மாலத்தீவு நாட்டில் தங்கி உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 80 பேரில் ஒரு பகுதியினனைர திரும்ப அழைத்துக் கொளவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது இந்தியா … ராணுவ வீரர்கள் கவனித்து வரும் மேற்கொள்வதற்கு வேறு பணியாளர்களை இந்தியா அனுப்பி உள்ளதாக தகவல்,

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *