தலைப்புச் செய்திகள் (25-03-2024)

*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மனுத்தாக்கல் தீவிரம் .. இன்று ஒரே நாளில் திமுக ,அதிமுக உட்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டிப் போட்டு மனுத்தாக்கல்

*இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு…..ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு.

*”கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை எண்ணி 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை.

*மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய் மர படகு சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு வேண்டும்… தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை.

*திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்… விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – தாரகை கட்பட்

*வடசென்னையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒரேநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றதால் சலசலப்பு… யாருடைய வேட்புமனுவை முதலில் பெறுவது என குழப்பம் – அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்.

*நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து… பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க வழங்க்கபடும் 10 நிமிடங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்.

*தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சந்திர சேகர ராவ் ஆட்சிக் காலாத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடக நிர்வாகிகள் ஆகியோரின் போன் உரையாடல்களை ஓட்டுக் கேட்ட வழக்கில் உளவுத் துறை தலைவராக இருந்த பிரபாகர ராவ் என்ற அதிகாரி முதல் குற்றவாளி என்று அறிவிப்பு .. அமெரிக்காவில் உள்ள ராவை இந்தியா கொண்டு வருவதற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு.

*பெங்களூரில் குடி நீரைப் பயன்படுத்தி காரை கழுவியது, செடிகளுக்கு ஊற்றியது போன்ற புகாரின் பேரில் 22 குடும்பங்களுக்கு தலா ரூ 5 ஆயிரம் அபராதம்… கடுமையான குடி நீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை சிக்கணமாக சேமிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை.

*நாடளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் அரசில் சட்டம் மாற்றப்படும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய கர்நாடக மாநில பாஜக எம்.பி. அனந்த குமார் ஹெக்டேவுக்கு இந்த தேர்தலி்ல் போட்டியிடும் வாய்ப்பு மறுப்பு … உத்தர் கனடா தொகுதியில் ஆறு முறை எம்.பி.யாக இருந்த ஹெக்டேவுக்குப் பதில் விஷ்வேஷ்வர் ஹெக்டே என்பவர் வேட்பாளராக அறிவிப்பு.

*ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் இசை நிகழச்சியில் குண்டு வெடிப்பு நடத்தி 130 பேரை கொன்ற வழக்கில் 4 பேர் குற்றவாளி என்று கண்டுபிடிப்பு .. தஜிஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு.

*இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி Echo Recording என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் விலகல்… வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு உத்தரவு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *