தலைப்புச் செய்திகள் (16-03-2024)

*தமிழகத்தில் ஏப்.19- ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல், வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20 வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27, வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28, திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30,வாக்குப்பதிவு: ஏப்ரல் 19….. வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4 ஆம் தேதி.

*18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு…
முதற்கட்டம் – ஏப்ரல் 19;
2- ஆம் கட்ட தேர்தல் – ஏப்ரல் 26;
3 – ஆம் கட்ட தேர்தல் – மே 7;
4 -ஆம் கட்ட தேர்தல் – மே 13;
5 -ஆம் கட்ட தேர்தல் – மே 20;
6- ஆம் கட்ட தேர்தல் – மே 25;
7 -ஆம் கட்ட தேர்தல் – ஜுன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

*மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கம், அருணாச்சல், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல்…. சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு தேர்தலை சந்திக்கிறது காஷ்மீர்.

*100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்…..1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையர் தகவல் .

*ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்….தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி.

*சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்….ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். ..தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது…..

*மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. …முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்….50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்.

*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மல்லிகர்ஜுன கார்கே அறிவிப்பு … 100 நாள் வேலையின் ஊதியம் நாடு முழுவதும் ரூ.400ஆக உயர்த்தப்படும்.

* ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி.

*இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்……நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் பொதுக் கூட்டம் முடிந்து நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

*தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்… சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.

*தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் அதிகாரிளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை….

*வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.

*அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1000 வழங்க அரசாணை….முன்னதாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

*அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் …. மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரில் ஆஜரான நிலையில் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு

*வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்…. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்… 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *