தலைப்புச் செய்திகள் (13-01-2024)

*இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்… காணொளி வழியாக நடைபெற்றக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதீஷ்குமாருக்கு தர முடிவு செய்து உள்ளதாகவும் செய்தி.

*இந்தியா கூட்டணி கூட்டத்தி்ல் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை … மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்களுக்கு சீட் ஒதுக்காததால் சமாஜ்வாடி கட்சியும் இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக தகவல்.

*மணிப்பூர் முதல் மும்பை வரை 13 மாநிலங்கள் வழியாக செல்லும் 6,700 கிலோ மீட்டர் நீள பாரத நியாயம் என்ற நடை பயணத்தை நாளை தொடஙகுகிறார் ராகுல் காந்தி … மொத்தம் 67 நாட்கள் நடைபெற உள்ள பயணத்தை மணிப்பூர் மாநிலம் தவ்பேல் நகரத்தில் தொடங்கி வைக்கிறார் கார்கே.

*தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு … வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு கோரிய ரூ 37,907 கோடியை உடனே வழங்கக் கோரிக்கை.

*நிதித்துறை, உள்துறை மற்றும் வேளாண் துறையை ஆலோசித்து தமிழ்நாட்டுக்கான வெள்ள நிதியை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்து உள்ளதாக சந்திப்புக்கு பின் டி.ஆர். பாலு பேட்டி … ஜனவரி 27 – ஆம் தேதிக்குள்் நிதி வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்து உள்ளதகாவும் பாலு தகவல்.

*திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் வைகோ- மதிமுக, ஜெயக்குமார்- காங்கிரஸ், ரவிக்குமார்- விசிக, நவாஸ்கனி- முஸ்லிம் லீக் ஆகியோர் பங்கேற்பு… அதிமுக உறுப்பினர்கள் குழுவில் பங்கேற்க வி்ல்லை.

*உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே… எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என பதிலடி கொடுத்து வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார் உதயநிதி என்று முதல்வர் ஸ்டாலின் கருத்து.

*தமிழ்நாடு தேர்வாணையத்தில் நிகழும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க விசாரணைக் குழு அமைக்கவேண்டு்ம் … சென்னை உயர்நீதிமன்றம் உ்த்தரவு.

*டோக்கன் பெறாதவர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது இன்று தொடங்கியது … டோக்கனை பெறாத ரேஷன்தாரர்களுக்கு நாளையும் பரிசுத்தொகுப்பு வழங்க நடவடிக்கை.

*சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியார் விருதை சுப. வீரபாண்டியனுக்கும் பெருந்தலைவர் காமராஜர் விருதை உ. பலராமனுக்கும் வழங்கினார் முதல்வர் … அம்பேத்கர் விருதை சண்முகமும் திருவள்ளுவர் விருதை பாலமுருகன் அடிமையும், அண்ணா விருதை பத்தமடை பரமசிவமும் பெற்றனர்.

*சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் நேரடி விமான சேவை தொட்ங்க உள்ளதாக சென்னை விமான நிலையம் நிர்வாகம் தகவல் … சுற்றுலா மையமான லட்சத் தீவுகளுக்கும் விமான சேவையை தொடங்க திட்டம்.

*பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்த பல லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டதால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் … சுங்கச் சாவடிகளை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம்.

*நில நிர்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த ஜெ.பார்த்திபன் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக நியமனம்… தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.

*சென்னையில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் உயர்வு … பொங்கல் நெரிசலை கணக்கி்ல் கொண்டு விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக புகார்.

*சென்னையில் மத்திய அரசின் குடியுரிமை அலுவலக அதிகாரியாக பணியாற்றிய சேகருக்கு லஞ்ச வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு … கடந்த 2007- 2009 ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்கு குடியுரிமை சான்றிதழ் கேட்டு வந்தவர்களிடம் சேகர் ரூ 2 கோடி லஞ்சம் வாங்கி சொத்துகளை வாங்கினார் என்பது வழக்கு.

*சென்னை தண்டையார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ள எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்… சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது, படகுகள் பறிமுதல் … அனைவரையும் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு சாகும் வரை தணடனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு … கணவரால் தமது மகள் பாலியல் கொடுமை செய்வதை தடுக்காத தாய்க்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை.

*மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு வருமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நான்காவது முறை சம்மன் … இந்த முறையும் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கெஜ்ரிவால் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவலால் பரபரப்பு.

*நாடாளுமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய உள்ளதை தடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது பாஜக … ஆம் ஆத்மி கட்சி புகார்.

*மத்திய அமைச்சர் எல்.முருகனின் டெல்லி வீட்டில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க முடிவு … பொங்கல் விழாவில் பங்கேற்க பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்.

*மராட்டிய மாநிலத்தி்ல் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் இனி சட்டசபையில் ஷிண்டே அணியின் கொறடா உத்தரவுபடி செயல்படாவிட்டால் பதவி பறிபோய்விடும் … சிவசேனா கட்சியின் இரண்டு பிரிவுகளில் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று நேற்று முன் தினம் தீர்ப்பளித்த சபாநாயகர் ராகுல் நர்வேகர் அடுத்த அதிரடி.

*ஏமன் நாட்டின் ஹவுதி போராளிகள் முகாம் மீது இரண்டாவது நாளாக அமெரிக்கா படைகள் குண்டு வீசி தாக்குதல் … செங்கடல் வழியாக செல்லும் பயணிகள் கப்பல் மீது தாக்குததல் நடத்தினால் ஹவுதி குழுக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஜோ படைன் எச்சரிக்கை.

*ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மொல்போன் நகரத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது …. அனைத்து வகைப் போட்டிகளிலும் மொத்தம் ரூ 400 கோடி பரிசு.

*தென் தமிழ் நாட்டிலும் காவிரி டெல்டாவிலும் லேசான மழை பெய்யும் … வானிலை மையம் தகவல்.

தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *